உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 35 பலவிதமான ஆயுதங்களைக் கொண்டசேனை விதம்விதமாகச் சூழ்ந்துவர, கீர்த்திபெற்ற வீரர்களுடன்பெரிய கப்பல்கள் செல்கின்ற கடலை அணையிட்டு அடைத்துக் கரையேறி இலங்கையின் நிலைமை (வாழ்வுநிலை) தொல்ைய் பத்து மணிமுடிகளைக் கொண்ட பாவியாம் ராவணனைக் கொன்ற பூரீராம பிரானது மருகனே! இருண்ட சோலையின் நறுமணமும் பொலிவும் மிக்குள்ள (அல்லது பரிமளம் அயலில் வீசுகின்ற) வயலூரில் எழுந்தருளியுள்ள அக்னிசுரர் என்னும் திருநாமத்தையுடைய சிவபிரானது குமரனே! கடம்பனே! வேலனே! காட்டை ஆளும் வேடர் சாதியில் வளர்ந்த குறமான் (வள்ளியுடன்) மகிழ்ச்சி பூண்ட கருத்தை உடையவ்னாகி, "மருட்சியை மோக மயக்கத்தைத் த்ந்து காது வரைக்கும் எட்டிப் பாயும் உன்னுடைய கண்ணாகிய பாணம் என்னுடைய நெஞ்சுக்குள் பாய்கின்றதை-(நீ) காணாமலிருக்கின்றாய்! அந்தச் செருக்கைவிட்டு என்னுடைய ஆவி உய்ய அருள் பாலிப்ப்ர்யாக" என் று (வள்ளியிடம்) உரைத்த வெகுப்ரீதி கொண்ட இளையவனே! காவேரி. யாற்றின் வட கரையில் உள்ள சாமிமலையில் உறைகின்ற தம்பிரானே! (சுகவெளத் தாணுவுடன்... என்றுசேர்வேன்) 210 எந்தத் திசையினும், மலையினும், கடல் சூழ்ந்த எந்தப் பூமியிலும் (அல்லது கடலினும், எந்தப் பூமியினும்), வீட்டின் உச்சி, மலை உச்சி முதலிய உச்சிகளிலும் வசிக்கின்ற பல வகையான எந்த உடலில் வாழும் உயிர் சேர் பிறப்புக்களிலும் (நான்) உழன்று திரியாமல் - இந்த உடலில் இருக்கும் பொழுதே (என்) உயிர் நிலைபெறுவதற்காக (உனது தாமன்ரய்ன்ன அழகிய அடியிண்ைகளில் மணமுள்ள மலர் கொண்டு, என்சித்தமும் மனமும் உருகி, சிறந்த வேதங்களிற் சொல்லப்பட்ட வ்ழியே, (உன்னைச்)