உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று தோறாடல்) திருப்புகழ் உரை 95 செந்தமிழால் நாள் தோறும் ஒதி (நான்) உய்ந்திட (நீ) உனது ஞானம் ஊறுகின்ற செம்மை சேர்ந்த கனி போன்ற வாயினால் (திருவாக்கால்) ஒப்பற்ற (உபதேசச்) சொல்லைப் போதித்து அருள்வாயாக. பாண்டியனுடைய பெரிய (நெடு நாளாயிருந்த) கூனும், வந்து சேர்ந்த சுரமும், பஞ்சாய்ப் பறந்தோடும்படியும் வாது பேசி, சமண ஊமைகள் மேன்மை அழிந்து அவர்களுடைய மயிற் பீலியுடனே கொடிய கழுவில் ஏறும் வகைக்குத் (திருப்பதிகங்களை) ஒதின பண்டித மூர்த்தியே! ஞானத் திருநீற்றைப் (பாண்டியனுக்குத்) தந்தவனே! யானை யாளி இவை இருந்த பசுமை வாய்ந்த தினைப் புனத்திலே உலவின மலை வேட்டுவருடைய சாதியார் ஒன்றுகூடி வெறியாட் டயர்ந்து (உன்னைக்) கும்பிட்ட பயனாக (அவர்களிடம் வளர்ந்த வள்ளியை மணந்து அதனால்) அவர்களுக்கு நல்வாழ்வை அளித்து, அவர்களுடனே விளங்குகின்ற மலைகள் தோறும் விளையாடல் செய்யும் பெருமாளே! (செங்கனி வாயிலோர் சொல் அருள்வாயே) 237 வஞ்சமே கோடி கோடிக் கணக்காய் உள்ளத்திற் பொருந்த வைத்துள்ள வன்கண்ணர் (கொடியர்), ஆரவாரத்துடன் அருள் புரிபவர்கள் போல. வீண் வாது பேசுபவர்கள், கொஞ்சிப் பேசிக் காம லீலைகளைப் (பற்றிப்பேசிப்) புகழ்ந்து ஆசையை வளர்க்கின்ற விலை மாதர்களுடைய. ஐம்பெரும் பாவங்களுக்கும் இடமாகும் கொங்கைகளின் மேல் அன்பு வைத்து, மிக வருத்தம் காட்டிப் பேசி, நாள் தோறும் நான் மெலிவு உறாமல்