உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . கயிலை மலை திருப்புகழ் உரை 99 (எனது) (நல்வினை - தீவினை என்னும்) இருவினைகளும் பொரிந்து சாம்பலாக, அழகிய (உனது) திரு அருளம் உருவத்தே ஈடுபட்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியில் (இடத்தே) தவநெறிப் பயனாய் இருவரும் உருகி (நீயும் நானும் ஒன்றுபட்டுக் கலந்து) - (அத்தகைய கலப்பால்) இவ்வுடல் நிலைபட்ட தெனப் பொருந்தித் தேவர்கள் (யாவரும்) இவன்),இளையோன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும்பேற்றை அருள்வாயாக; சிலம்பின் (ஒலியும்) கழலின் (ஒலியும்) எட்டுத் திக்குகளும் செவிடுபட, பிரமன் - திருமால் *H ருத்திரன் எனும் முத்தேவர்களும், பழைமையான வேதமும் பணிந் து போற்ற, சூலம், மழு, மான் (இவை மூன்றும்) பக்குவமாய்ச் சுழல, ஆதிசேடனது முடிகள் நெறு நெறு என்று முறிய பசுவ்ாகிய வாகனத்தில் (திருவடி) மலரை வைத்திருத்தலை விட்டு - நடனம் செய்து, அடியார்கள் அரஹர என உருகி, ஜெய ஜெய என்று போற்றத் திருநடனக் காட்சியைத் தந்தருளும் உமை பாகனாம் பரமேசர் அருளிய பாலனே! மலர் அணிந்த கூந்தலையுடைய அழகிய பாவையும், இலக்குமியின் மகளுமான (வள்ளி)யின் ப்டுக்கை (கலவிப்) போருக்கும், அடியாரிடத்தும், அல்லது அடியார்கள் வாழும் கயிலைமலையிடத்தும் விருப்பங் காட்டும் பெருமாளே! (இளையவன் என வித்தாரம் அருள்வாயே) 239 தேனைப் பெருக்கும் முப்பழங்கள் (வாழை, மா, பலா), பால், செவ்விய கரும்பு, இளநீர் இவைகளின் (சுவை) இன்பத்தைப் பழித்த சிவ அருள் (திருஅருள்) ஊறுவதால் (நன்கு பெருகுவதால்)