உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கயிலை மலை) திருப்புகழ் உரை 103 திகைப்பு உண்ட நிலையில் (அவர்கள் கேட்டபடி கொடுத்த) வரத்தின்படி கிடைத்த பொருளைக் கையிற்சேகரித்து எடுத்து வரும்படிச் செய்கின்ற திருட்டுப் (பெண்களுடைய), கொங்கையைக் கொண்ட பெண்களுடைய மருட்சி தரும் (காம) வலையில், நிறைந்த காம கலைக்குள் (சாஸ்திரங்களில்) (அல்லது) மறைவு தரும் சேலைக்குள் விழுவேனோ! பகைத்து வந்த அரக்கர்களின் தலைகளை அறுத்து படர்ந்துள்ள கரு நிறம் (நீல நிறம்) கொண்ட மயிலில் ஏறி. பருமைத் தன்மை வாய்ந்ததும், குணமான நன்மணங்கொண்ட பக்குவ நிலையும் பெருமையும் கொண்டதுமான கொங்கையை உடைய மாது வள்ளியை சிறப்புமிக்க (தினைப்) புனத்தில் வைத்து அணைத்து வெள்ளி மலையில் (கயிலைமலையில் - கந்தகிரியில்) உறைகின்ற நாதனே! விரித்துள்ள சடையில் ஒருத்தி (கங்கை) இருக்க, மானைக் கரத்தில் ஏந்தியவராகிய சிவபிரானுக்கு (உரிய) பெருமாளே! (மருட்டு வலைக்குள்...விழுவேனோ) 241 பனி போலச் சுக்கிலம் துளி யளவுக்குக் கருவிற் சேர்ந்த அளவில் அவ்விடத்தே ஒரு அறிகுறியாய்ப், (பின்பு) மிளகு (அளவாய்), (பின்பு) பாக்கு (அளவாய்), அதன்பின் LIహర్)35T, முற்றின தேங்காய் போலவும் ஆய், பின்னர், பலாப் பழ அளவுக்கு வயிறாகி. முன் பக்கத் தொடர்ச்சி X சூசம் - சூசகம் - அறிகுறி. O துவர் - பாக்கு. * பல கனி - பலாக் கணி.