பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் உரை 45 (மதுரைக்கு) மேற்கே அழகிய திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக் கும் அழகிய (உயர்குலக் கங்கையின்) குழந்தையே! குறக்குலத்து அழகிய கொம்புபோலும் (வள்ளியை) முன் ன்ைப்புனத்திற் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே! (உன் கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே) 12 மார்பிற் பதிந்துள்ள செவ்விய அழகிய பொற்குடம், நாள் தோறும் பருத்து, உயர்ந்து, விண்ணிடத்தே தலையை முட்டும் மலை, தந்தச் செப்பு இவைகளை ஒக்கும் தனபாரம படத்தை உடைய பாம்பின் பற்கள் கக்குகின்ற நஞ்சு, பண்களைக் களிப்பிற் பாடும் வண்டு, அம்பு, நீரில் மீன், (இவைகளைப்)போன்ற பருத்த கண், கூந்தலுக்கு ஒப்பான இருட்டு - என்றெல்லாம் இளைஞோர்கள், (மாதர் உறுப்புக்களைத்) துதித்து, முன்னதாகக் கும்பிட்டு, நடந்த நிகழ்ச்சிகளை (அவரிடம் உள்ளபடியே) உரைத்து, அன்புக் களிப் புடன், உள்ளம் அஞ்சச், சிற்றிடையைச் சுற்றியுள்ள உடையைக் களைந்து இன்பக் கலக்கத்தை அளிக்கும் (பொது) மகளிரிடத்தே - கட்டுண்ணும் பாவப் பித்தன், பொய்யன் (ஆகிய நான்) (இப்) பூமியில் எண் மனத்திலும் புத்தியிலும் (உள்ள) ம்யக்கத்தை விட்டொழிக்க (உனது) தன்டை(யணிந்த) தாமரை (யன்ன திருவிடி)யை எனக்கென்று (சிறப்பாக) அருள்வாயே; குதித்து வெண்ணிறச் சங்கங்களைச் சுறாமீன்கள் மோதி எறியும் கடலில் ஒளித்து அஞ்சிப் புகுந்த அசுரன் (சூரனது) குடல் சரிந்து குறையக்குத்தி அசைத்த ஒளி வேலனே! சிறந்த கரும்பு போன்ற மொழியை உடையவளும், கிளி போன்றவளுமான ஆனைமிகள் (தேவசேனை) இடம் மறைத்த சொல்லுடன், காட்டினிடையே குங்குகுக் குகும்.கூக