பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 189 274 (பிறவித் துயரினின்றும்) உய்யும் பொருட்டு (நான்) ஞான மார்க்கத்தைக் கைவிடாது எப்பொழுதும் (எப்பொழுதும் கைவிடாது பற்றி), உள்ள வேத சாஸ்திரங்களைக் கொண்டு அறிவு தெளிவுற ஓதி. (எனக்குள்ள) மயக்க இருள் நீங்க, ஆசை வைக்க வேண்டிய பொருளை (iபட்டின்பத்தை) க் கருதும்படியான ஆசை (உன்) அருளுதவியாற் கிடைத்து (உன்மீது) விருப்பம் பெருகி உலகு ஏழினையும் நிலை நிறுத்திக் காக்கும் நீதிகொண்ட. வள்ளியா (கருணையனே) பழைய (திருவல்லம் என்னும்) தலத்திலும், நீலோற்பலகிரியிலும் (திருத்தணிகையிலும்), வீற்றிருக்கும் வள்ளியா (கருணையனே) உன்னைப் புதிய வில்வ மரத்திலுள்ள மகிழ்ச்சிதரும் கொழுந்து இலைகளைக் கிள்ளி வீசிப் பூசித்து உன் மலரடிகளைப் பணியமாட்டேனோ! படத்தை உடைய பாம்பை அணியும் பெரியார், அவரது (இடது) பாகத்தில் உள்ள பிராட்டி (பார்வதி), பரிசுத்தமான சடையில் உள்ள கங்கை - (இவர்கள் மூவர்க்கும்) குமரனே! மெதுவாக (உனக்கு) மோகம் பற்றி வளர்ந்த மலையாகிய வள்ளிமலைமேல் வைத்த முற்றின நேயம் கொண்டவனே (வள்ளி மலைமீது காதல் முற்றிய நேயனே)! உனக்குச் சுற்றமாய் அமைந்த (அல்லது உன்னைச் சூழ்ந்த) குறவர்களுக்கு அரசே! m செய்யுமால் வெற்பு (மால் - செய்யும் - வெற்பு) மயக்க இருளைத்தந்த கிரெளஞ்ச கிரியை உருவிச் செல்லும்படி கடுங் கோபங்கொண்ட வேலாயுதத்தைத் திரித்துவிட்ட கையனே! திருமாலுக்கு வாய்த்த அழகிய மருமகனே! (அல்லது திருமால் தனது மார்பில் வைத்துள்ள இலக்குமியின் மருகனே!)