பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 335 செங்காடு போல (ரத்தம் பெருக), வந்த மூர்க்கரான அசுரர்களை, சங்காரஞ் செய்த (சங்கரித்த) சிகாமணியே! வேல் கொண்டு அவர்களைச் சிதற அடித்தவனே (நிலை குலைத்தவனே) பெருமை மிக்க மயில் மீது ஏறிவரும் முருகவேளே! பிறை நிலா, கொன்றை, பாம்பு, பெருங்கடல் போன்ற கங்கை, எலும்புக் கூடு இவைகளை மின் போன்ற ஒளிவிடு சடையில் தரித்துள்ள என் பிதா - சதாசிவ வர்க்கத்தான் அருளிய பாலனே! (வள்ளியின் தவ நிலையில்) மதிப்புக் கலந்த திருவருளால் மான் போற் கண்ணியாம் வள்ளியைச் சிறந்த அழகிய (களவியல்) வழியில் திருமணம் விரும்பிச் செய்து, tதிரிசிராப் பள்ளி என்னும் தலப் பெயரை செபிப்போர் மனமாகிய பூமியில் (இடத்தில்) (வீற்றிருக்க) விரும்பும் பெருமாளே! (மனமே! மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே) 'திருச்சிராப்பள்ளி - என்னும் தலப்பெயரை ஒதுதலின் பயன். இந்தத் திருப்புகழைப் பாடினபோது அருணகிரியார்க்கு அப்பர் சுவாமிகளது தேவாரம் நினைவில் வந்திருக்கலாம்; ஏனெனில் அருணகிரியார் திரிசிராப்பள்ளித் திருப்புகழாகிய இந்தப் பாட்டில் தமது மனத்தை விளித்துத் திரிசிராப்பள்ளி என்னும் தலத்தின் நாமத்தை ஒதுதலின் பலனைக் காட்டி, இறைவன் திருநாமத்தை ஓதுக என்றது போல, அப்பர் பெருமானும் திரிசிராப்பள்ளிப் பதிகத்தில் தமது நெஞ்சை அழைத்து. "நெஞ்சே ஒன்று சொல்லக்கேள், திருச்சிராப்பள்ளி யென்றலுந் தீவினை நளிச்சிராது நடக்கும் நடக்குமே. என்கின்றார் (V-853), இங்கனம் திரிசிராப்பள்ளி என்னும் தலத்தின் நாமத்துக்கே விசேடம் இருப்பதால் திரிச்சிராப்பள்ளி என்பவர் மனத்தில் வீற்றிருக்க விரும்புகின்றார் இறைவர். இனி, (336ஆம் பக்கம் காண்க)