உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - சிரப்பள்ளி திருப்புகழ் உரை 357 அருச்சனைகளை ஏற்றுக் கொள்பவனே! மந்திரங்களால் அழைக்க எழுந்தருள்பவனே! (அல்லது அருச்சனையில் எழுந்தருள்பவனே) வயலூரில் வாழ்ந்தருளும் தலைவனே! ಶ್ಗ ருத்ராட்சமாலை தரித்தவனே! குறமங்கை ள்ளியின்) தலைவனே! அழகிய ஆடம்பர மூர்த்தியே! வீர லட்சுமியாம் பார்வதியிடம் சர்தா ஜாதா (தோன்றியவனே) ! அல்லது வீர லட்சுமி விளங்குபவன்ே இரதா (இனிமை வாய்ந்தவனே) பல திக்குகளையும் காத்துப் பரிபாலிப்பவனே! சிவாகம நூல்களை உபதேசிக்கும் ஞான மூர்த்தியே! மேன்மை தங்கும் நாதனே! சிராமலை அப்பராம் தாயுமானவர்க்கும் சுவாமியே (குருமூர்த்தியே)! மிகச் சிறந்த ஒழுக்கம் பூண்டவராய்த் தருப்பைப் புல் ஏந்தும் (அல்லது தருப்பை ஆசனம் கொண்ட) ஆசார அந்தணர்களுடைய தம்பிரான் மூர்த்தியே! (பத்ம சீர்பாதம் நீ இனிவந்து தாராய்) 339 பகல், இரவு என்கின்ற வேற்றுமை நிலையில் தடுமாறாமல் இருக்க (இரவு பகல் அற்ற இடத்தை அடைய) பதி (ஆண்டவன்) எனவும், குரு எனவும் தெளிவு தரும் ஞான ரகசிய உபதேசத்தை போதித்து, அநுபூதி (திருவருட் பிரசாதப் பேறு) என்கின்ற இனிய நிலையைத் தந்தருளுக. இகத்துக்கும் பரத்துக்கும் தலைவனாய் நிற்பவனே! இயல், இசை (நாடகம்) எனப்படும் முத்தமிழுக்கும் உரியவனே! ழுக )சிரகிரி என்னும் தலத்தில் எழுந்தருளிய (குமர "والتي هي ᎧaᎢ ! சரவணத்தில் உதித்த பெருமாளே! (ரத நிலைதனைத் தருவாயே)