பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H. 70 முருகவேள் திருமுறை (2- திருமுறை வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும் இடைவி டாது நெருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமானே! (8) 24. அருள் பெற 'அவனிபெ றுந்தோட் டம்பொற் 'குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பெற் றழிதரு திண்டாட் டஞ்சற் றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித் திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் றமுநாளும் பதறிய அங்காப் பும்பத் தியுமறி வும்போய்ச் சங்கைப் படுதுயர் கனன்பார்த் தன்புற் றருளாயோ! தவநெறி குன்றாப் பண்பிற் றுறவின ருந்தோற் றஞ்சத் தனி மல ரஞ்சார்ப் புங்கத் தமராடி 1. அவனி பெறும் தோட்டு அம் பொற் குழை - பூமியை விலை மதிக்கும்படியான தோடாகிய அழகிய பொற் குழை, 2. குழை காது . 'மணித் தோடுங் குழையிலாட' (அஷ்டப், சீரங்க நாயகி - ஊச்-3) 3. மலர் அஞ்சு ஆர் புங்கத்து - ஐவகைப் புஷ்பபாணத்தால்,