உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/932

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 459 աոուա மலையன்ன கொங்கைப் பாரமும் பொருந்த இடையின், வார் (நுண்மை) நெகிழ்ந்து அசைய, (அல்லது இடையளவில் கச்சு (ரவிக்கை) அவிழ்ந்து அசைய, அவளது திருமுகத்தில் மகிழ்ச்சியுற்று, ஈர ரச (கருணா ரசத்துடன்) கருணையுடன், வாய் இதம் கோதி - வாயினின்று இனிமையாக வரும் இதழ் ஊறலைச் சிறிது சிறிதாகப் பருகி, (அல்லது ஈரமான இரசம் (ஊறல்) உள்ள வாயின் இனிமையை அனுபவித்து) இரத்தினச் சிலம்பு ஒலிக்க, அவளை மணக்கும் காதலைப் பாராட்டும் மயிலனே! பரிசுத்தனே, குற மாது (வள்ளிக்கு) வேண்டியவனே வேத முழக்கம் விளங்கும் திருச்செங்கோட்டு நகரில் வாழ வந்தவனே! கருநிறமுள்ள திருமாலும், பிரமனும், தேவர்களும் புகழும் தம்பிரானே! பேறுறுக விஞ்சை தாராய்) 375 இறத்தல் (அலைச்சல்) கூடியதாய்ப் பொய்யாக முடியும் பிறப்பு என்பதைத் தும்பறுத்திட்டு (இணைக்கும் கயிற்றை அறுத்துத் தள்ளி) இன்று (ஒர் ஒழுக்கத்தில்) நிற்கப்புத்தியில் சற்றேனும் குறிக்கைக்கு (கவனித்து மேற்கொள்ள) அறியாமல். காய்ந்து கொதித்தும் முயற்சிகள் செய்தும், சந்தேகம் கொண்டும் (அல்லது எண்ணங்கள் கொண்டும்), விடம் போன்ற சங்கடங்களால் (மனம்) புண்ணாகித், தாமரையன்ன, மை பூசின, கண்ணைக் கொண்ட கொடியனைய மாதர்கள் மீது பொருந்தி நெருங்கும் ஆசைப் பொருளனாம் (ஆசைப் பாத்திரனாம்) எனக்கு நற்குணத்தை அளித்துச் சிறப்பும் களிப்பும் அடையச் செய்து, வண்டு உண்ணும் தேன் கொண்ட (பூந்தாதுகள் உள்ள) வயலூர்த் தலத்திலே