உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/949

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை யத்தி னிடையடிமை விழலாமோ, தத்து கவனவரி ணத்து வுபநிடவி தத்து முநியுதவு மொழி tயாறுத் தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர் தத்தை தழுவியப னிருதோளா. தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர் தத்து மலையவுனர் குல நாகந். தத்த மிசைமரக தத்த மணியமயில் தத்த விடுமமரர் பெருமாளே (16): 383. வாக்குப் பெற தத்த தாத்தத் தத்த தாத்தத் தத்த தாத்தத் தனதான அத்த வேட்கைப் பற்றி நோக்கத் தத்தை மார்க்குத் தமராயன். பற்ற கூட்டத் திற்ப ராக்குற் றச்சு தோட்பற் றியவோடும்;

  • முநி - திருமால் சிவமுநிவராய்த் தவநிலையிலிருக்கத் திருமகள் மானுருவுடன் எதிரிற் செல்லச் சிவமுநிவரின் திருட்டி பட்டு அந்த மான் கருப்பம் உற்று வள்ளிக்குழியில் ஒரு பெண் குழந்தையை ஈன்று தன் இனம் இல்லை எனக் கண்டு ஓடிப்போயிற்று. இந்தப் பெண் குழந்தையே வள்ளி. வள்ளிக் கிழங்கு தோண்டிய குழியிற் கிடைத்தமையால் வள்ளி எனப் பெயர். இக்குழந்தையைக் கண்டெடுத்த வேடர் தலைவன் வள்ளியை வளர்த்து வந்தான்; திணைப்புனம் காக்க வைத்தான்; இவளது பேரழகை நாரதர் தணிகேசரிடம் சொல்ல அவர் வந்து சில லீலைகள் புரிந்த பின், வள்ளியை மணந்தனர் என்பது கந்தபுராண வரலாறு.

" LDyr ார் மாதவனாய் மாதவஞ் செய்திடலும் வணமானாய் வந்தெதிர்ந்த மலர் மானைப் புணரப் (அடுத்த பக்கம் பார்க்க)