உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/980

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - ஊதிமலை திருப்புகழ் உரை 507 அன்புடனே, மனக் கசிவுடன், ஆதி அருணாசலேசுரர் என்று என்னை ஆண்டருளும் உன்னையே வணங்க (அருணா சலேசுரர் நீயே என்று உன்னை நான் வணங்க) அருள்புரிக (ஐம்பூதங்களால் ஆகிய உடலில்) பூதம் ஐந்தும் (மண், நீர், தி, காற்று, வான் ஐந்தும்) வேற்றுமைப்படவே, அதனால் அலைந்து, முழுமையான சிவாகமங்களை ஒதி அறியாமல், ஆபரணங்கள் அணிந்த கொங்கையை உடைய மாதர்களின் மேல் ஆசை பலவாறு மனதிற்கொண்டு, அவர்களுடன் காமபோக இன்பத்தையே அடியேன்மேல் நீ தயவுடன் இரக்கம் வைத்து, நண்பான அருள்புரிந்து, நீதி மார்க்கமே திகழ, உபதேச அறத்தின் நுண்மையைச் சிவபிரானது விளங்கும் திருச்செவியில் உரைத்த வேத மந்திரத்தவனே (வேதமந்திரம் உரைத்தவனே): நீல மயிலில் ஏறிவரும் கூரிய வேலனே! ஒதப்படும் வேதழும் ஆகமமும் சொல்கின்ற யோகத்தையே புரிந்து, '(ஊழி) விதியின் போக்கை (அல்லது - உலகை) உண்ர்ந்து கெர்ள்பவர்களுடைய வினை ஒழிய, அவர்தம் ஊனும், உயிருமாய்க் கலந்து வளர்ந்து, கீர்த்தியுடன் அவர்களுக்கு நல்வாழ்வை அருளும் பெருமாளே! ஊதிமலைமேல் ரியமுள்ள பெருமாளே! (அல்லது ஊதிமலைமேல் வீற்றிருக்கும்) கந்த பெருமாளே! (உனையே வணங்க அருள்வாயே) 394 மயிர் சிக்கெடுத்து, முடித்த, பெருத்த கூந்தல் முடியை உடையவர்கள், சூதான வழிகளுக்கு நன்கு வழி செய்யும் மங்கையர்கள், (ஆகிய பொதுமகளிரைக்) கூடுவதால் வரும் அற்பமான இன்பத்தை நெஞ்சில் நினையாமல் அந்த (அற்ப இன்பத்தை ம்னத்தினும் விலக்கி) ஊழி - விதி நல்லூழிச் செல்வம்" - கலித்தொகை 130 ஊழி. உலகம் என்னலுமாம். " ஊழி ஏழான ஒருவா போற்றி" (அப்பர்- V1-55-8).