உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/982

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - ஊதிமலை திருப்புகழ் உரை 509 திடம் இல்லாத மனத்தை ஒழித்து (திடம் பெற்ற நெஞ்சைப் பெற்று), திடமுள்ள கூரிய மதியையும் ஞானத். தையும் கொண்ட குணத்தைத் தரப்பெற்று, உனது திருவிளை. யாடல்களைப் பேசும் இடங்களில் இன்பம் ஊற நான் நிற்கும்படி அருள் புரிவாயாக. நாத நிலையில் (சிவதத்துவத்தில்) கருத்து வரும்படி மகிழ்ந்து அருள்புரியும் ஞானகுருவே! எல்லா உலகங்களையும் படைக்கும் பிரமனுக்குத் தாதையென்று சொல்லப்படும் திருமாலின் மருகனே! - உன்னை நாடும் அடியேனுக்குத் துன்பம் வந்தது (அடியேனுக்கு வந்த துன்பம்) திரும்படி திருவடியைத் தந்த கூரிய வ்ேலனே! நாதராம் சிவபிரான் பிள்ளைக்குருவே' (தகப்பன் சாமியே) என்று அன்புடன் உன்னை அழைத்தருளின வடிவேலனே (கூரியவேலா)! _ தோதிமி தித்தித் திமித்த டிங்குகு. தனத்த தந்த என்று இசையுடனே - (கணங்கள்) சூழ நடனம் செய்து, உடலினின்றும் நான் உயிரை (விடுதற்கு) விடும்போது என் மீது இரக்கமும், என்னைச் சுப மங்கள வாழ்த்து நிலையிற் சேர்ப்பிக்கத் திருவுள்ளமும் கூடி வந்து எனக்கு அருள்புரிந்தவனே! ஒதப்படும் மந்திரங்களுக்கு உட்பொருள் என்றும், சிவ சம்பந்தமான பத்தர்களிடத்தில் இரக்கமுள்ளவனென்றும், உயர்ந்த பிரணவ எழுத்துக்கு உயிர் நாடி என்றும் சொல்ல நின்ற பேரொளியானவனே! ஒதியமரம் பூத்துக் குகையில் உதிர்க்கின்ற பொன் ஆபரணம் போல அருமையான மோட்சப் பலனைத் 圖 பெருமாளே! ஊதிமலையில் உள்ளம் மகிழ்ந்து வீற்றிருந்: தருளும் பெருமாளே! | (அருள் புரிவாயே)