பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/993

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கனகி ரிக்குள்வளர் பெருமாளே. (1) தீர்த்த மலை (இது சேலம் மாவட்டம் மொரப்பூர் புகைவண்டி நிலையத்திற்கு 8 மைல் தூரத்திலுள்ள ஹரூருக்கு வட கிழக்கு 9 மைல், 4 பர்லாங் மலையடிவாரத்திலும் மலை மேலும் கோயில்கள் இருக்கின்றன. இதற்குச் சைவ - எல்லப்ப நாவலர் பாடிய தலபுராணம் ஒன்றுண்டு.) 399. மனதுக்குப் புத்தி கூறுவது (முருகனைச் சந்திப்பாயாக) தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தனதான 'பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை கூற்று வருவழி பார்த்து முருகிலை tபாட்டை யந்தின மேற்று மறிகிலை தினமானம். பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை பாழ்த்த பிறவியி லேற்ற + மனதுநல் வழிபோக: மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை யேட்டின் விதிவழியோட்ட மறிகிலை பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ னிதுகேளாய். வாக்கு முனதுள நோக்கு மருளுவ ணேத்த புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த ಘೀ நீக்கு முருகனை மருவாயோ, இப்பாடல் 330 - ஆம் பாடல்போல மனதுக்குப் புத்தி கூறுவது : பாடல் 330 - கீழ்க்குறிப்பைப் பார்க்க t பாட்டை - கட்டத்தை. # மனது - மனமே!