உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/994

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - தீர்த்த மலை திருப்புகழ் உரை 521 யானைமுகப் பெருமான் (கணபதிக்கு) இளையவனாம் கந்த (வேள்) என செயப்புகழ் பெற்ற பெருமாளே! கொங். கணகிரி என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (அருள்வாயே) தீர்த்த மலை 399 (மனமே நீ) பாட்டின் பொருள் அறிந்து உருகுதல் இல்லை; பாட்டையும் பாட்டின் பொருளையும் சொல்லக் கேட்டும் உருகுதல் இல்லை; யமன் வரும் வழியைக் கண்டும் (இறைவனிடத்தே பத்தியாய்) உருகுதல் இல்லை; கட்டங்களைத் தினந்தோறும் அநுபவித்தும் (உண்மைப்பொருளை) அறிகின்றாயில்லை - நாள்தோறும் பாம்பை அணிந்துள்ள சிவபிரான் அருளும் வீட்டின்பத்தை விரும்புகின்றாயில்லை; நாவின் நுனிகொண்டு (பிரானை)ப் போற்ற அறிகின்றாயில்லை; பாழ்படும் (இந்தப்) பிறப்புக்களிலேயே ஈடுபடுகின்ற (என்) மனமே! நீ நல்ல வழியே போக மாட்டேன் என்கின்றாய்; (உடற் சிறையாகிய இந்த) கூட்டினை விடுகின்றாயில்லை; ஏட்டில் (எழுதியுள்ள) விதி (தலைவிதி) எந்த வழியாக ஒடுகின்றது என்பதை அறிகின்றிலை; (இங்ங்னம் எல்லாம் நீ இருக்கும் வகையைப்) பார்த்தும், (சும்மா இருக்க முடியாமல் நான்) இனி ஒரு வார்த்தை சொல்லுகின்றேன் . இதைக் கேட்பாயாக. வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் (புகழ் ஏத்த வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன்) - அவனது திருப்புகழை ஒதி அவனை ஏத்த உனக்கு நல்ல வாக்கையும் உனது உள்ளத்தில் (நல்ல) கருத்தையும் அருள் புரிவான்; (ஆதலால்) அடியார்க்கு எளியனைத் தன்னை வாழ்த்துவ்ோருடைய இருவினையை (நல்வினை தீவினையை) விலக்கும் முருகனை நீ சிந்திப்பாயாக.