உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • வாரண முரித்து t மாதர் மேகலை வளைக்கை நான

மாபலி முதற்கொ னாதன் முருகோனே. வாருறு தனத்தி னார்கள் சேருமதி ளுப்ப fகை வாகுள குறட்டி மேவு பெருமாளே.(1) 898. பிறப்பு அற தானன தனத்த தான தானன தனத்த தான தானன தனத்த தான தனதான நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல நீள்குளிர் வெதுப்பு வேறு முளநோய்கள். வேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு நீடிய விரத்த மூளை தசைதோல்சி: பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு பாய்பிணி யியற்று பாவை நரி நாய்பேய். பாறொடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான பாழுட லெடுத்து வி லுழல்வேனோ,

  • சிவபிரான் யானையை அட்டுத் தோலை உரித்தது:

- பாடல் 286-பக்கம் 210 கீழ்க்குறிப்பு. t மாதரிடம் பலிக்குச் சென்றது : தாருகா வனத்து முனிவர்கள் கடவுளிடத்தில் அன்பு இல்லாதவர்களாகி வேள்விகள் பல செய்து வந்தனர். இவர்களுடைய தருக்கை அடக்க வேண்டிச் சிவபிரான் திருமாலை மோகினிவேடம் கொள்ளும்படிச் சொல்லித் தாமும் பலிக்கலன்-பிச்சைப் பாத்திரமும் குலமும் கையில் ஏற்றுத் தாருகா வனத்துக்குச் சென்றார். திருமால் தமது பெண் வேடத்தால் முநிவர்களை மயக்கினர். சிவபிரான் இசை பாடி ஐயம் (பிச்சை) ஏற்க முநிவர்களின் வீடுகள் உள்ள தெருவிற் சென்றனர். இவர் அழகைக் கண்ணுற்ற இருடி பத்திணிகள் இவர்மீது மோகங்கொண்டு நாணம், கைவளை, ஆடை மூன்றையும் இழந்து வருந்தினர். உண்ணிகழ் உணர்வு மாழ்க உயிர்பதைபதைத்துச் சோர அண்ணல்தன் காதல் என்னும் ஆழ்திரைப் பட்டார் அன்னார்" (தொடர்ச்சி 621ஆம் பக்கம் பார்க்க)