பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பட்டு திருப்புகழ் உரை 625 (உறவினரின்) மலரன்ன கைகளால் அரிசியிடப்பட்டு அழகுள்ள துணியும் எடுபடப்பட்டு, உடலின் மறைவான இடங்களில் எல்லாம் ( பற்றப் பற்று கனல்) பற்றுகனல் பற்ற-பிடிக்கின்ற நெருப்பு பற்றிக் கணகணென்று எரிய, உடலானது (இங்கனம்) சுடப்பட்டு பக்கத்தில் இருந்தவர்கள் தாம் வந்த வழியே திரும்பிப்போய் பொருந்திய நீரில் முழுகி, வீட்டுக்குப் போய்த் துக்கம் நீங்குகின்றார்கள் மனிதர்கள் - (இத்தகைய மனிதர்களை) இன்ன உறவு இவர் என்று உறவு முறையைக் குறித்துக் குறித்து அத்தகைய குறிப்பால் (அவர் பொருட்டு) மகிழ்ச்சி பூணவும், அழுது படுதலும் ஏற்படவும், துஷடனான மன்மதனது LDGUTTLD LIITGL) காம உணர்ச்சி உண்டாகப் பெண்களின் கையில் அகப்பட்டு, இளைத்து மிகவும் மனம் நொந்தழிதலையும் கொண்ட அடிமையை நீ நினைத்துச் சொர்க்கலோக ஊருக்கு போகும் வழியை இதுதான் வழி யெனக் காட்டிச் சொல்லி உனது அழகிய திருவடியைத் தந்தருளுக; (பொருவில்) தனக்கு நிகரில்லாத - மலையரசன் பர்வதராஜன்-பெற்ற பச்சை அழகு மயில், திரிபுரம் எரிபட (மேருவாம்) பொன் வில்லைக் கைப்பற்றினவள், (இயல்) உழுவலன்புடன் (புதிய) அதிசயமானவகையில் ஊக்கத்துடன் அருமையான தவத்தை மேற்கொண்டு காஞ்சிப்பதியிற் பொருந்தி விளங்கும் புகழ்பெற்ற தேவி (பார்வதி) அருளிய புதல்வனே! (இராவணனுடைய) பத்துக் கொத்தான தலைகளும். புயம் இருபதும் அற்று விழச் செலுத்தின சக்ராயுதக் கையனான கடவுள், புள்ளிகளைக் கொண்ட ஆதிசேடன் என்னும் பாம்பின்மேல் துயில் கொள்ளும் சுத்தம்ான பச்சைநிற மேக வண்ணன் (திருமாலின்) மருகனே! அருமையான மரகதநிற மயில்மீது வீற்றிருந்து, ஒலிக்கும் கடல் சுவறவும், அசுரர் கூட்டம் அழிபட்டு (கட்டையற கட்டற) கட்டோடு ஒழிய, தேவர் தலைவன் இந்திரன் சுகத்துடன் (குடி வைத்தற்கு உற்ற) குடி ஏறுதற்குத் தக்கபடி வைத்த மிக்க இளையவனே!