பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம்) திருப்புக ழ் உரை 729 சேலம் 938. இரக்கம் கொண்ட நார்) அன்பு (அற்று) சற்றும் இல்லாமல் - (அழல்) நெருப்பை நிலவு வீசுவதாலும், (சிலை) பொதியமலையினின்றும் பொருந்தி வரும் (கால்) தென்றற் காற்று வந்து மேலே படுவதாலும், குளிர்ச்சியுள்ள சோலையிற் குயில் கூவுதலாலும், குழல் (புல்லாங்குழல்) ஒப்பற்ற இன்னிசையைத் தருவதாலும். தனியே பொருந்திய தன்மையில் உள்ள இந்தப் பெண் தனது இரண்டு (கயல்மீன் போன்ற) கண்களும் சோர்வுறும்படித் தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்றுத் தளர்ச்சியுறாமல் மனம் ஒருமைப்பட்டு (நிம்மதியாக) வாழும் பொருட்டு (உனது) அழகிய ரத்னமாலையணிந்த மார்பிடத்தே - கிருபாகர மூர்த்தியாகிய முருகா! நீ வந்து அணைந்தருளுவாயாக கிரெளஞ்ச மலைமீது வேலாயுதத்தைச் செலுத்தி அது பெருந் தொளைபட்டழியும்படிச் செய்த குமரனே! இயல், இசை, நாடகம் எனப்படும் முத்தமிழ்ப் பெருமானே! பேரொளிச் சொரூபனாம் தேவனாகிய சிவபெரு. மானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, லக்ஷ்மீகரம் பெருகி ஓங்கும் சேலம் என்னும் பதியில் வீற்றிருப்பவனே! போருக்கு எழுந்த எழுகிரியும் சூரனும் அவன் சுற்றத்தினரும் இறக்க, ஒப்பற்ற அந்தச் சூரனாம் மயில் மீதேறி (உலகை) வலம் வந்தவனே! புள்ளியை உடைய முகத்தைக் கொண்ட யானையின் திருமுகத்தைக் கொண்ட கணபதிப் பெருமானுக்கு இளைய பெருமாளே! அற்புதப் பெருமாளே! (அணைவாயே) (தொடர்ச்சி) 0 புகழ் முகவேழம் - புதல்வரை....புகர்முக வேழத்து.ஏற்றி" மணிமேகலை 3-142. 'யானைப் புகர் முகம்" - குறுந்தொகை 284