பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1382

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலஞ்சி திருப்புகழ் உரை 823 (அரங்க நக கன தனம்) நக-கன-தனம் அரங்க (நகம்) மலைபோன்ற-கனத்த கொங்கைகள் (நீ அணைந்து வருவதால்) அரங்க - அழுந்துதல் உற, குதலை இசை - மழலைச் சொல்போல வும் இன்னிசை கூடிய (அவ் வள்ளியின் மொழி) (அலங்க) அசைவுபெற அசைவுற்று வெளிவர, (நியம் உற) நியமம் உற நிச்சயம்ாகவே திண்ண்ம்ாக, மயிலின்மேல் - (நீ). ஏறி வீற்றிருந்து (எனது) பிறப்பாகிய வினையை ஒழித்து, (என்னைப் பிடிக்க) வரும் (கொடிய அந்தகன் அகல) பொல்லாத யமன் என்னை அணுகாது நீங்கும்படி வந்தருளுவாயாக; (தரங்க...நதி, முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி) (தரங்கம்) அலைகளைகொண்ட நதி (கங்கை), (முதிய) முற்றின மகரமீன்கள் சண்டையிட்டு விளையாடுவதும், (;திரை) அலைகள் வீசுவதுமான (சலந்தி):சலதி அல்லது சலநிதி போன்றதும், கடல் போன்றதுமான நதி (ஆகிய) கங்கையின் குமரனே! (காங்கேயனே!) என்று வான (தலம்). வானுலகத்தவர் - விண்ணவர்- போற்றிப் பரவ, வேதம் ஒலி :) போற்ற, எழுந்தருளும் சிறிய கிண்கிணிகள் அணிந்துள்ள (உனது) திருவடிகளைத் தொழுபவரும், கடலிடையே (இரங்கு) கருணையுடன் பள்ளி கொண்டுள்ள (தொல்லை) பழையவாரம் (திரு அரங்கர்) (சீரங்கத்துப் பெருமானும்) ஆகிய திருமாலின் மருகனே! பன்னிரண்டு திருப்புயங்களை உடையவனே! குறிஞ்சி நிலத்துக்கு உரியவனே (குறிஞ்சி வேந்தே)! விளக்கம் பூண்டுள்ள தமிழ்மொழி விளங்க வந்த (சம்பந்தராய்த் தண்டமிழ் மொழிந்த) பெருமாளே! திரு இலஞ்சி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (அந்தகன் அகல வருவாயே) 976. (கொந்தள ஒலை) தலைமயிர்ச் சுருளின்கீழ்க் காதோலைகள் குலுங்கி அசைய, (வாளி) வா என்னும் காதணியும். (சங்கு) சங்கு :: (ஆழி) மோதிரமும் கழல, (கரு) மேகம் போன்ற கூந்தலில் உள்ள பூமாலை சரிய, நறுமணப் பன்னிர் சேர்ந்த