உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 511. பேரின்பப் பொருளைப் பெற தனன. தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான

  • கருணை சிறிதுமில் t பறிதலை + நிசிசரர்

பிசித அசனம றவரிவர் முதலிய கலக விபரித வெகுயர சமயிகள் பலர்சுடடிக். கலக லெனநெறி கெடமுறை முறைமுறை கதறி வதறிய குதறிய கலைகொடு கருத அரியதை விழிபுனல் வரமொழி குழறாவன்; புருகி யுன தருள் பரவுவகை வரில்விர கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய லுணர்வு கெடிலுயிர் புனரிரு வினையள றதுபோக உதறி லெனதெனு மலமறி லறிவினி லெளிது பெறலென மறையறை யறைவதொ ருதய மரணமில் பொருளினை யருளுவ தொருநாளே. தருண சததள பரிமள பரிபுர சரணி தமனிய தநுதரி திரிபுர தகனி கவுரிய வதிபக வதிபயி ரவிசூலி. சடில தரியது பவையுமை திரிபுரை சகல புவனமு முதவிய பதிவிருதை சமய முதல்வித னயபகி ரதிசுத சதகோடி,

  • அருமையான பாடல் இது மனப்பாடம் செய்தற்கு உரியது.

t பறி தலையர் - சமணர் - திருப்புகழ் 172 பக்கம் 398 கீழ்க்குறிப்பு ! நிசிசரர் பிசித அசன மறவர் - ராக்ஷதரையும் புலாலுன்னும் மறவரையும் ஒத்த சமணர்.