உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 169 511. கருணை என்பதே சிறிதும் இல்லாத தலைமயிர் பறிப்பவரும், அரக்கர்களுக்கு ஒப்ப்ானவரும், புல்ால் உண்னும் மறவரை (வேடரை) ஒத்தவரும் ஆன சமணர் முதலிய, (கலகங்கள் செய்தும், விபரீத உண்ர்ச்சியால் மாறுபட்டு ஆரவாரம் செய்யும்) பல திறத்த பர சமயவாதிகள் பலரும் கூடி கலகலென (ஆரவாரம் செய்து) நீதி முறைதவறி, அவரவர் முறை வரும்போதெல்லாம் பெருங் கூச்சலிட்டுக் கதறி, (வதறிய குதறிய வாயாடித்திட்டி - நெறிதவறிப் பேசும் கலை நூல்களால் எண்ணுதற்கும் அரியதான பொருளை, கண்களில் நீர்வர, மொழியானது குழறி அன்புகொண்டு. உருகி, உனது திருவருளைப் போற்றும் மனநிலை வந்தால், (விரகு) தந்திரபுத்தி ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுகள் விட்டால், வாக்கு செய்கை, மன உணர்ச்சி (மனம் . வாக்கு காயம்) இம் மூன்றின் தொழிலும் அழிந்தால், உயிரைச் சார்கின்ற நல்வினை. தீவினை என்னும் இரண்டு வினைகளாம் சேறு போம்படி. உதறி விலக்கினால், எனது எனது என்னும் ஆசையாம் குற்றம் அற்றுப்போனால் அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான ஒப்பற்ற தோற்றம் முடிவு இல்லாத (அந்தப் பேரின்பப்) பொருளை (அடியேனுக்கு நீ) அருள்செயும் பாக்கியநாள் ஒன்று (எனக்குக்) கிட்டுமா! என்றும் இளமையொடு கூடியதாய், தாமரை போல்வதாய், நறுமணம் வீசுவதாய்ச் சிலம்பணிந்தத்ாயுள்ள திருவடிக்ளை உன்டயவள், பொன் (மலை). மேருவை வில்லாக ஏந்தினவள், திரிபுரங்களை எரித்தவள், கவுரி, ப்கவதி, (தேவி), பகவதி, பயிரவி, சூலம் ஏந்தியவள். சிங் - தரித்தவள், அநுபவை (போகங்களை நுகர்விப் பவள்) உமை, திரிபுரை, எல்லா உலகங்களையும் ஈன்றருளிய பதிவிரதை, எல்லாச் சமயங்களுக்கும் முதல்வி, (ஆகிய பார்வதியின்) பிள்ளையே கங்கிையின் மகனே! நூறுகோடி