உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 275 எழுகடலும் தீ மூண்டு எரியவும், மேருமலையும் பொடிபடவும், பிரமனும், வேதங்களும், சூரியனும் இடம் விட்டுப் பெயர்ந்து ஒடவும், பழைய ஆதிசேஷன் (உள்ள) இருள் இலாத பாதாள லோகமும், இமையமலையும் பொடியாகவும், சக்ரவாளகிரி இரண்டு பிளவுபட்டு விழவும் திக்குகளில் உள்ள அஷ்ட பர்வதங்கள் சாய்ந்து விழவும், அழகுள்ள சிறப்புவாய்ந்த இந்திரனும் தேவர்களும் அவர்களுடைய ஊரில் (பொன் னுலகில்) பூத (புகுத) குடியேறவும், (மாறுசெய்) பகைமைத் தொழில்பூண்ட அசுரர்களுடைய பெரிய சேனை தூள்படவும் விளையாடி அமைதியைப் பொருந்தாத சூரர்களோடு போர்புரிந்த வேலாயுதனே! சிறப்புவாய்ந்த அண்ணாமலையில் வாழ்வாக வீற்றிருக்கும் பெருமாளே! (அழியா வீடுபோயினி அடைவேனோ) 559. தாழையின் பூவை முடித்துள்ள பெண்களுடைய மயலில் (மோகத்தில்) உற்றுத் தாழ்நிலையதான அற்பமான நினைவுகளாலும், ஆராய்ச்சிக்கு இடந்தரா திருக்கும் (அகப்படாதிருக்கும்) ஊழ்வினையாலும், மிக்க அழிவு வருதற்கே நினைக்கின்ற செயல்களாலும், வேதனையிற்பட்டு மிக்க பாதகத்துக்கு இடந் தருபவனாய், வீணாக உலக முழுமையும் சுழற்சி (அலைச்சல்) உறும் அடியேனுக்கு - மோகூடி வீட்டைத் தந்தருளி ஆட்கொள்ளும் பொருட்டு வெற்றிவேலைத் திருக்கரத்தே எடுத்து விளங்குகின்ற மயில்மீதிலே அமர்ந்து வந்தருளுக; நீதிநெறியை அழித்த தாருகாசுரனை வேரோடே அறுத்து பெரிய புகழ்கொண்ட தேவர்கள் (தத்தம்) இற்கள் (இல்லங்களில்) குடியேற