உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 283 கருணைப்பிரான், பொருந்திய முக்கண்ணன் பெற்ற முருகனே! (தினைப்) புனத்தில் திரிந்துலவின மெல்லிய கொடிபோன்ற வள்ளியின் பருத்த கொங்கை மலைகளிற் சேர்ந்து அணைந்தருளின புயங்கள்கொண்ட வீரனே! அலைகொண்ட கடலிற் புகுந்து சண்டைசெய்த பெரிய சேனையைக் கொண்ட அசுரர்களை வெட்டித் தொலைத்து క్లి உயர்ந்த தேவர்கள் தொழ, அழகிய சதங்கை (கிங்கிணி) ஒலிசெய வருபவனே! அடியார்கள் பயத்தால் துன்புற்று ஒடுங்கும் வருத்தத்தை நீக்கி, அன்புதரும் (பெருமாளே)! அண்ணாமலையில் சிறந்து வீற்றிருந் தருளும் பெருமாளே! (நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே) 563. சிவம் என்கின்ற தலைவியுடன் இன்ப நுகர்ச்சி கொண்டவனாய், சிவஞானம்' என்கின்ற அமுதத்தை உண்டு அதனால் பசி நீங்கி. விளக்கத்துடன் (நானும் தலைவியும்) இருவோரும் ஒரு ரூபமாய் (எட்டுத்) திசையிலுள்ளோரும் உலகினர் யாவரும் - - சுகானுபவம் உடையவன் இவன் ஒருவனே என்று வியக்கும்படித் திருமால், பிரமன், தேவர் (யாவரும்) இவன் இளையோன் - ('என்றும் இளையோன்" "முருகன்") என்று வியந்து கூற, மறை (வேதமும்) (அங்ங்னமே) எடுத்துக் கூற இறையோன் இடமாய் (சிவபிரானிடத்தில்) நான் (உனைப்போல) விளையாட (எனக்கு நீ) அழகிய வேலையும் மயிலையும் தந்தருளுவாயாக. மிகவும் லோகங்கள் எல்லாம் முறையோ என்று ஒலமிட, நெருப்பை வீசம் வேலுடன் சென்று அசுரர்களின் தலைகள் தூள்பட, ஏழு கடல்களும் துாள்பட, சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு (அந்த வேலைச்) செலுத்தினவனே!

  • வேல்மயில் பெறுதல் - திருப்புகழ் 413 பார்க்க