பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 3.71 597. மந்தரம் என்று சொல்லப்பட்ட மலைபோன்ற கொங்கைகளில் (கழுத்தில் அணிந்துள்ள) பொன்மாலை அழுந்திக் கிடக்க, நறுமணங் கொண்ட சந்தனம், செஞ்சாந்து இவை தம் கலவைச் சேற்றுடன் பனிநீர்களைக் கலந்து பூசிவைப்பவர், (முகம் சசி) சந்திரன் போன்ற முகத்தையும், மேகம் போன்றதான கூந்தலையும் உடையவர், அம்பு கயல்மீன், வாள் - இவை போன்ற கண்ணினர், செங்கழுநீர்ப்பூ நிரம்பவைத்துள்ள கூந்தலானது (ஒலை) காதணி (ஒலைச்சுருளில்リ நன்றாகச் சுருண்டுள்ள காதினை உடையவர்கள், துவள்கின்ற இடையானது. வாட நடனம் செய்பவர், (தம்மாட்டு வருபவர்களுக்கு) மருந்திடும் மாயவித்தைக்காரர், கொஞ்சுபவர், இளங்குயில் போல்பவர், காம மயக்கம் தரவல்லவர், வஞ்சிக்கொடி போல்பவர், தமது வீட்டை அடைந்து வந்தவர்களை (எந்த ஊர் நீர்) - நீர் எந்த ஊர்? முன்பே பழக்கம் உள்ளவர் போல இருக்கிறதே என்றெல்லாம் பேசிக் கிாமமயக்கம் வரும்படி இனிய சொற்களைப் பேசி. அழகு உற்ற நேசத்துடனே கிட்ட நெருங்கி நீர் வாரும்' என்னும் தன்மையைக் குறிப்பித்து வீட்டுக்கு உள்ளே அழைத்துக் கொண்டுபோய், (தமது) (பண்ணால்) இசைப்பட்டால் (சரசம்) காமசேஷ்டை உண்டாக வேணும் என்ற எண்ணத்துடன் வந்தவருடைய செல்வம் என்கின்ற வளம் செறிந்த தேன்ை உண்ண (பொருள்களைக் கவர) முயற்சித்த தாற் கிட்டிய பொன்னை அங்கைமேல் கண்டவுடனே (பொன் கின்டத்த உடனே) வந்தவரோடு விருப்பம் காட்டிச் சேர்ந்து இன்பம் அடைகின்றவர் ஆகிய மாதர்களால்