பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை (460) 33 புனித மூர்த்தி; தேவி பார்ப்பதியின் கையில் விளங்கும் ரத்நம், பழைய கங்காதேவிக்குக் கிடைத்த புது முத்தம், பூமியில் அன்றைக்கு அற்று (அல்லது. அன்று) எய்ப்பவர், (அன்றன்றைக் கென்று ஒன்றும் சேமித்து வைக்காது, இறைவன் திருவுளச்சம்மதம் என்று யாவற்றையும் விட்டு) இளைத்த பெரியோர்க்குச்-சேமப் பொருளாய் (காப்புநிதியாக) விளங்குபவன் என்றெல்லாம் கூறி உருகி, எல்லாப் பொழுதினி லும் (எப்போதும்), வணங்குதலே இல்லாத என்னை, (என்னிடம் உள்ள இக்குறைகள் எல்லாவற்றையும் நீ உணர்ந்த) பின்னும் என்னுடைய குற்றங்களைப் பொருட் படுத்தாது பொறுத்துச் சம்மதித்து என்னையும் உனது பக்தர் கூட்டத்துள் ஒருவனாக வைத்துள்ள உனது பொறுமையைக் (கருணையை) நான் என்ன சொல்லிப் புகழ்வது, (அந்த உனது கருணைக்கு) நிகர் (ஒப்பு) ஒன்று உள்ளதோதான் (நிகரே - ஒப்பே) இல்லை என்றபடி அனனியம் பெற்று (அன்னியமின்மை-அத்துவைத நிலையைப்) பெற்று நீ நான் என்னும் இரண்டற்ற நிலையைப் பெற்று) அற்று அற்று ஒரு பற்றும் ( எவ்வித பற்றும் நன்றாக அற்றுப்போய்) தெளிவு அடைந்த சித்தத்தவர்கள் தெளிந்து உணர்ந்த அறிவுருவான அமலை- பூங்கொத்துக்கள் அணிந்த அமலை (மலமற்றவள், நிர்மலி). அழகிய கச்சிப் பதியில் பிச்சிமலரை அணிந்துள்ள கொந்தளம் (கூந்தலை உடைய) பாரை (பரை-பராசத்தி). அறவி (அறச்செல்வி-புண்ணியவதி), நுண்ணிய பச்சை நிறமுள்ள அழகிய கொடிபோல்வாள் கற்கண்டு, அமுது இவையிரண்டினும் அதிகமாகத் தித்திக்கின்ற சொற்களை உடைய கொம்பனையாள் எல்லா அண்டங்களையும் தோற்று விக்கும் முத்து மேருமலை, பொன் மேருமலை (என்னத் தக்கவள்)