பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 425 அஞ்ச வெற்பு (கிரெளஞ்சம் நடுங்க), ஏழு கடலும் ஒடுங்க, (அல்லது வெற்பு ஏழு ஏழு கிரிகள் அஞ்ச, கடல் மங்கிக் குலைய) கொடிய அசுரர்களின் கூட்டம் (விண்ணில் ஏற) இறந்துபோம்படி செய்த கந்தவேளே! அண்டம் ான உலகங்கள் புகழும் எந்தையே! (அல்லது எந்தை சிவபிரானுடைய) அழகிய ஊராம் புலியூரில் (சிதம்பரத்தில்) (பொன்) அம்பலத்தே ஆடுகின்ற நடராஜப் பெருமானுக்குத் தம்பிரானே! (உம்பருக்காவதினின் வந்துதோணாய்) 614. செவ்விய (கலசம்) குடம் போன்ற கொங்கைகளை உடைய மாதர் மீது-சிந்தை பலவாறாகத் தடுமாறி, அங்கம் மிகவும் மெலிவு உறாமல் - அன்பால் (என் உள்ளம்) உருகும்படி நீ அருள்புரிக; செங்கையிற் பிடித்துள்ள (சேவற்) கொடியோனே, செஞ்சொற்கள் தெரிந்த-தெரிவிக்கும் புலவனே! மங்கை பார்வதி பெற்ற குழந்தையே! (பொன்) அம்பலத்தில் விளங்கும் பெருமாளே! (அன்புருக அருள்வாயே) 615. கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவர், பிறை போலவும், வில் போலவும், விளங்கி அழகு கொண்ட புருவங்களை உடையவர், கண்கள் கயல்மீன் போலவும், அம்பு போலவும் செயலை ஆற்றும் தொழிலினர், சந்திரன் போன்ற முகத்தை உடையவர், (மாதர்) அழகுள்ள கமுகுபோன்ற கழுத்தினர், புயம் மூங்கில் (அல்லது கரும்பு) போன்றவர், கொங்கைகள் மலைக்கு இணையான (குவடார்). திரட்சி உடையவர், கரம் தாமரை போன்றவர், வாழை போன்ற தொடைகளை உடையவர், (சர சுங்க மாடை) சுங்க சர மாடை - கள்ளத்தனமான நடையாற் கைக்கொண்ட பொன் (கொண்டு வாங்கப்பட்ட)