பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/484

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 479 விரிந்த இடமாகிய (கடல் - பூமி) எரிகொள்ள, குலகிரி) கிரெளஞ்சகிரி நெரிந்து பொடிபட வேகமாய் வரவல்ல மயிலில் வந்தவனே! ஏழுகடல்களும் கொ ந்தளிக்க அசுரர்களுடைய உயிரை உணவாகக் கொண்ட வேலாயுதத்தை உடையவனே! தேவர்களும் முநிவர்களும் போற்றிப் பணிந்த புலியூரில் நடனம் செய்கின்ற பெருமாளே! (உன் அடிகள் தருவாயே) 635. அஞ்சாமையாகிய வீரத்தையுடைய யமன் தனது திண்ணிய பாசக்கயிற்றின் நுனைத்தலையைப் பிடித்துக் கொண்டு வீசிப் பிடித்துக்கொண்டு போகும் வஞ்சனைத்தொழில் (அல்லது துன்பம்) என்மாட்டு வாராத வழிக்கு அளந்து வகைப்படுத்தியுள்ள வேதம் முதலாக பல சாஸ்திர நூல்களை ஒதி வகைப்பட்ட சமயங்கள் ஒன்றோடொன்று மாறு: பட்டு மோதித் தலைவேதனையாகப் போராடும் அருவருப்பான செயல்கள் ஒழியச் சத்தான உருவமுள்ள (பேரின்பப்) பொருள் அமைதி உண்டாக அடியேனுக்கு உபதேசித்தருளுக நறுமணமுள்ள செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் தேவி. இலக்குமிக்கும் திருமாலுக்கும் அழகிய மருமகனே! (இமய) மலை பெற்ற பார்வதியின் செல்வக் குமாரனே) கங்கை, சந்திரன், கொன்றை, பாம்பு - இவைதமை அணிந்துள்ள கடவுள் (சிவன்) நடஞ்செய்கின்ற புலியூரில் (சிதம்பரத்தில்) உள்ள குமரேசனே! (478 ஆம் பக்கம் கிழ்க்குறிப்புத் தொடர்ச்சி) x அறுவகை சமயம் - சமய வாது - வேண்டாமெணல் - பாடல் 156 பக்கம் 362 பாடல் 492 பக்கம் 114 பார்க்க O அலம்வர - அமைவுண்டாக * நகம் உதவிய பார்ப்பதி - பர்வதராஜ புத்திரியாகிய பார்வதி, நகம் - LIKosol.J.