பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/486

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புக ழ் உரை 481 கோபித்து வந்த அசுரர்கள் வீசுகின்ற அலைகள் பரந்துள்ள கடலிடத்தே பொடிபட்டழியச் சண்டை கழலிணைகளைப் போற்றிப்பணியும் அடியார்களுடன் கோபம் என்பதைக் கனவிலும் அறியாத (கருணாகர மூர்த்தியாம்) பெருமாளே! (பொருளை அடியேற் கருள்வாயே) 636. சுவை நிறைந்த சர்க்கரைபோன்ற மொழி, அமுத மாணிக்கம் போன்ற பற்கள், நிகரில்லாத வேல்போன்ற விழி, இவைதமை உடையவர்கள், பசும்பொன் போன்ற தன்மை உடையவர்கள், மேகத்துக்கு ஒப்பான இருண்ட கூந்தற் பாரத்தை உடைய செயலினர், எழுதுதற்கு முடியாததான பிறைபோன்ற அரிய புருவத்தினர், சித்திரம் எழுதினது போலமைந்துள்ள - தோடு கொண்ட - காது, பவளக்கொடியும், நீலக்கொடியும் ஒன்றோடொன்று மாறுபட்டு ஆடுவது. போலச் (செவ்விய சிரசிற் கரியகூந்தல் ஆட), ஸ்படிகத்தை அடுத்ததாய்த் தெளிந்ததும் பொன்னின் உருவம் கொண்டதுமான முகத்தில் உள்ள இலவம் பூப்போல அமைந்துள்ள வாயிதழ், குமிழம் பூவுக்கு ஒப்பான அழகு விளங்கும் மூக்கு, கமுகு, போன்று, திருமாலின் ஒளிகொண்ட சங்குக்கு ஒப்புகூறத்தக்க கழுத்து, அந்தக் கழுத்தில் முத்துமாலைக் கூட்டம், பிரகாசமுள்ள (தாலப்பனையின் இயல்கலா புத்தகம்) பனைஒலையால் அமைந்துள்ள பெருநூல் எழுதப்பட்ட ஒலைப்புத்தகம் போல அழகிய சிறந்த அடி ஒப்பு இல்லாத ஆனை, மலை என்று சொல்லும்படிஒளி நிலாவுகின்றதும், தேமில் படர்ந்துள்ளதும், பிணைந்துள்ள (ஆரத்தொடை) முத்துமாலை அணிந்: துள்ளதும், நிறைந்த இன்பரசத்தைக் கொண்டுள்ளதுமான தங்களுபமுள்ள மார்பில் -