பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 489 அடியேனிடம் வந்து கூடி, என்னை ஒரு அடிமையாகக் கொண்டு, மகிழ்ந்து, மெய்ஞ்ஞானத்தை எனக்கு அருளியவனே! வேதம் விளங்கும் புலியூரில் வாழும் பெருமாளே! குறமகள் (வள்ளி) மேல் ஆசை கொண்ட பெருமாளே! (இணையடி தாராய்) 638. காவித்துணி கட்டியும், தாழ்ந்து தொங்கும்படி சடையை வளர்த்து வைத்தும், காட்டிற் புகுந்து தடுமாறியும் . காய், பழங்களை உண்டும், தேகத்தை (விரதாதிகளால்) வருத்தியும், உலகம் முழுமையும் திரிந்து அலையாமல் - சிவனுடைய ஒடுக்கமும், ஐம்பூதங்களுடைய ஒடுக்கமும் நன்றாக உண்டாகும்படி - மேலான ஞான ஒளி விளக்கத்தை நான் காணும்படி எனக்கு உனது குளிர்ந்த தாமரையன்ன திருவடியைத் தந்தருளுக. பாவத்தின் நிறங்கொண்ட (பாவ உருவத்தினராகிய) தாரகாசுரனாதிய கூட்டத்தினராம் அசுரர்கள் பாழ்பட்ட டொழிய (உக்ரம் தரு) கோபம் கொண்ட வீரனே! (488- ஆம் பக்கம் கிழ்க்குறிப்புத் தொடர்ச்சி.) தணிகை நாயகனே' தணிகை நாயகன் மாலை 69, இங்கே சிவன்' என்பதில் முதல் எழுத்து சி - 2 மாத்திரை - ஒடுங்கிக் குறுகச் சிவன் சி . ஒரு மாத்திரை ஆதல் குறிப்பிடப்பட்டது

  • ஞானத்தின் பெருமை:

"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை - திருமந்திரம் 1467, 'முத்தி எய்தல் மெய்ச்சிவ ஞானத்தன்றி வேறுள கருமத் தாகாது" - திருக்கூவப் புராணம். "உரைசெயிற் பரமஞான மொன்றும் முக்திக்கேது - சரியைகற் கிரியையோகம் தாமொரு மூன்றும் ஞான மருவுதற் கேது . பிரபுலிங்க லீலை.