உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப் புகழ் உரை 517 (வேத சதுரத்தர்) சதுர் வேதத்தர் - (நான்கு வேதங்களையும்) உடைய பிரான், அல்லது நான்கு வேதங்களையும் கற்றவர்கள் (அல்லது வேதங்களில் சதுரர்கள்: வல்லவர்கள்) - (வாழும்), அழகிய புலியூரில் -- (சிதம்ப்ரத்தில்) வாழ்கின்ற ஒருத்தி) ஒப்பற்ற தேவி பார்வதி பங்கினில் மேம்பட்டு ள்ங்கும் நடன்மூர்த்தியாகிய சிவபிரானுக்கு (அவர் கேட்டபடியே மனம்) இன்சந்து, அருள் (உபதேசம்) அருளிய தம்பிரானே! (நடனப்பதம் சபை என்று சேர்வேன்) 648. கரிய கூந்தலை உடையவர்கள், முத்துப் போன்ற (பல்) வரிசை உள்ள வாயில் (ஊறலாகிய) சர்க்கரையை உடையவர்கள்) தைப்பிறை) தைமாதத்துப் பிறைச் சந்திரன் (அல்லது அலங்காரம் உள்ள றைச்சந்திரன்) போன்றதும், (நீள) வளர்ந்த, (சசி) பூரண நீே போன்ற பொட்டை அணிந்துள்ள்துமான நெற்றியை உடைய மாதர்கள், கரிய கயல்மீன் போலவும், (பத்திரம்) வாள் போலவும், வேலுக் ஒப்பானதுமான (கன்னை), உடையவர்கள் (நற்கணி) நல்ல திறன்மயுள்ள கணி- சித்திரம் எழுதுவோன். நேமித்து) சிந்தித்து...நன்கு யோசித்தும் (எழுதிர்த்), எழுத முடியாத, அழகிய வ்டிவ் (உருவம் - காந்தி) நிறைந்த தோளானது. (கரும்பாலையில் உள்ள) கரும்புபோல் உடையவர்கள், தேமல் பரந்துள்ள திரண்ட, (அல்லது) முத்து மாலை அணிந்த மல்ையன்ன, கொங்கையை உடையவர்கள் இட்ட கட்டளையாக (ஏவின வேலைகளைச் செய்துகொண்டே) தனியேனாகிய நான் தினந்தோறும் திரிந்து அலைவேனோ! ஆசையுடன் உனது (பத்மேல் - திருவடியின்மேல் புத்திய்ை வைத்து, மெய்ஞ் ஞானத்துடனே, (பத்திரமாகக் கொளவே) ஜாக்கிரதையாகப் பெறுமாறு முத்தியை அளித்தருளுக. (பூ மாலை அணிந்துள்ள கூந்தலை உடையவள். (அல்லது....இருண்ட கூந்தலை உடையவள்), அற்புதமான வேதச் சொரூபத்தை உடையவள், தனது அக்கினி உருவத்தில் மார்பில் # பொருந்திய ம்லிைபோன்ற கொங்கைப் பாரத்தைக்

  • தை - தை மாதம் அலங்காரம் - தை புனை மாது" (நிகண்டு).