உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி) திருப்புகழ் உரை 3 655. இப்பூமியில் அதிக பாவியாய், மிக்க சூது நிறைந்த மூடனாய், மனத்தில் அழுந்தின திருட்டுப் புத்தி உடையவனாய், பொருந்திய மிக்க காம மயக்கில் (அல்லது - அறிவு மயங்கும்) தாகம் (ஆசை) மிக்குள்ள வீணனாய், சண்டைக்கு உற்ற வேல் போன்ற கண்ணியர்களான (பொது) மாதர்கள் தாம் பிழைப்பதற்கு உதவி செய்யும் (ஏது) செல்வத்தைத் தேடித் தரும் நினைவைக் கொண்டு - பூரணமான சிவஞான நூல்களை (ஒதுதலில் (மனம்) சேர்ந்துள்ள) ஒதுதலில் விருப்பங் கொண்டுள்ள அன்பர். கள் பூசுகின்ற உன்மைத் திருநீற்றை (உண்மை மகிமை வாய்ந்த திருநீற்றை இடாத இரு வினையாளனை (திருநீற்றைப்) பூச வைத்து, உண்மைப் பதவியான உனது திருவடிகளைக் காணும்படி அருள்புரிந்து, திருவருள் மயமாம் ஞானம் என்கின்ற அறிவும் (எனக்குக்) கிட்டுமாறு அருள் புரிவாயாக;