உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம்) திருப்புகழ் உரை 31 667. படங்கொண்ட அரவுபோன்ற நுண்ணிய இடையை (மத்யப் ப்ரதேசத்தை) உடைய மாதர்கள் மெல்லச் செய்து கொள்ளும் அலங்காரங்களை விரும்பி. சிறுவன் அற்பன் எனும்படி ஒடி மோகம் மிக்க காமக் கடலில் விழுகின்ற தனித்த நாய்போன்றவனான நான் பிழைப்பதற்கு ஒரு காலத்தில், ஐயனே! (உனது) உபதேசத்தை என்னுடைய உள்ளம் உருகி விரும்பும்படி ஒதி உள்ளது என்றும் இல்லாதது என்றும், உண்டென்றும் இல்லையென்றும், இவையிரண்டும் அல்லாததும் அவிரோத - மாறு - விரோதம் இல்லாததும், (உல்லாச) உள்ளக் களிப்பைத் தருவதும் , (விநோதம்) வியப்பைத் தருவதுமான (பொருளைத்) தந்தருளுக. உலகம் முழுமையும் ஆள்கின் ற ஐயனே! குமரேசனே! வள்ளிக் கொடிக்ள் படர்ந்துள்ள காடுகள் பக்கத்திற் சூழ்ந்துள்ள வள்ளிமலையில் வாழும் வள்ளியின் மணவாளனே! கரிய கடல்கள் ஏழிலும் நெருப்பெழ. கொடிய அசுரத் தலைவர்கள், அவர்களிருந்த கிரெளஞ்சகி rՈ, எழுகிரி யுடன் மாண்டு வி ԱՔ வென்ற வேலாயுதத்துடன் விளையாடல் புரிந்தவனே! வெண்ணிற அழகிய மாடங்கள் நிறைந்த லகூழ்மிகரம் பொருந்திய வீதிகள் உள்ள வெள்ளி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே! (அவிரோத உல்லச விநோதம் தருவாயே)