உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை நகர்) திருப்புகழ் உரை 137 அழகிய மலர்த் தடாகங்கள் எங்கும் இருந்த தினைப் புனத்தே வாழ்ந்த பெண் (வள்ளியின்) கொவ்வைக் கனி போன்ற வாயின் அமுதுாறலை உண்ட குமரேசனே! இரண்டு கூறாகியும் ஒன்று கூடி வந்த சூரன் அடங்கி ஒடுங்கக் கூரிய வேலைச் செலுத்தின பெருமாளே! கோடை நகரில் வாழ வந்த பெருமாளே! (பாதமலர் சேர அன்பு தருவாயே) 709.

  • (ஏறு ஆனாலே) இடபமும் பசுவும் கலந்து வருதலாலும், சாம்பலாயும் அழிவு படாத மன்மதவேள் ஏவுகின்ற மணமுள்ள புஷ்பபாணத்தாலும்,

ஏயா ஏயா - பொருந்துதலுற்றுப் பொருந்துதலுற்று (மாயா) கவலை மிகுதியால் வருந்தி, (வேயால் ஆம் ஏழு ஒசைத் தொளையாலே) - புல்லாங்குழலில் உண்டாகின்ற ஏழிசையைத் தருகின்ற தொளைகளாலே (மாறாப்) எழிலும் நிறமும் மாறுதல் அடைந்து, (ஊறாய்) (ஊறு) துன்பமுற்று. (ஈறாய்) முடிவடைந்தது போலாகி, (மாலாய்) ஒரே மோக மயக்கமாய், (உன்மேல் நினைவு) நீங்குதல் இல்லாத மான்போன்ற இவளை (இந்தப் பெண்ணை) (நீ) ஒதுக்காமல். வந்து பார்த்துச் சேராவிட்டால் (அல்லது வருவாயாக, பார்ப்பாயாக! இவளுடன் சேர்வதற்கு மனமில்லாவிட்டால்) உனது வாடாத கடப்ப மாலையையாவது தந்தருளுக. பொங்கி மேலெழுந்து வெற்றியுடன் பதினான்கு லோகங்களையும் வலம் வந்த சிறப்பு நிறைந்த மயில்வாகனக் குமரேசனே! தேவனே! இறப்பு இல்லாத, மூப்பு இ): நாதனே! தைரியமுள்ளவனே! கோடைப்பதியில் வீற்றிருப்பவனே! 曹 ஏறானாலே நீ ற்ாய் மாயா - ஏறானாலே நீறாகி மாய்ந்த து போலாகி - எனவும் பொருள் காணலாம்.