உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை நகர்) திருப்புகழ் உரை 139 (வேறாய்) வேறுபட்ட மனத்தனாய், (மாறாய் ஆறாம்) மாறுபட்ட (பகைமை பூண்ட) வழியிற் செல்பவனான பெரிய சூரன் (வேரற்று) அடியோடு விழும்படிச் சண்டை செய்தவனே! (வேதனுக்கு) பிரமனுக்கு அறிவு ஊட்டினவனே! (அல்லது, வேதம் வல்லவனே அறிவாளியே) வேலனே! குழந்தையே! வீரனே! வீரம் வாய்ந்த பெருமாளே! (நீபத் தொடை தாராய்) 710. மியின் எல்லாப் பக்கங்களிலும் வளைந்துகொண்டு ஒலிக்கின்ற கடலாலும். தினந்தோறும் மாதர்கள் சேர்ந்து சொல்லும் வசை மொழியாலும். விஷத்தைச் செலுத்துகின்ற சந்திரன் என்னும் நெருப்பாலும் அழிவுறாமல். (உனது) பன்னிரண்டு புயங்களாலும் (இவளை) அணைக்க வந்தருளுக; அழகு பொருந்திய குறத்தி வள்ளியைத் தழுவின மார்பனே! கோடையம்பதியிற் பொருந்தி நிற்கின்ற மயில் வீரனே! காலனும் (யமனும்) அஞ்சும்படி (கிரெளஞ்ச) கிரியைத் தொளை செய்த முதல்வனே! (வானோர்) தேவர்களுடைய கால் விலங்குகளை உடைத்தெறிந்த பெருமாளே! (அணைக்க வருவாயே)