உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை நகள்) திருப்புகழ் உரை 141 711. நட்பை வெளிக்காட்டி நண்பருக்கு வஞ்சனை செய்யும் கீழோர் போதித்த நன்றியை மறந்த கீழ்ோர் அநுட்டிக்க வேண்டிய விரதங்களை விலக்கி அழித்த கீழோர், பெரியோரை வைது நிந்தித்து இகழ்ந்து பேசின. கீழோர், ஒருவருக்கு ஈதலைப் பார்த்து அதைத் தடை செய்த கீழோர், சத்திய வார்த்தை என்பதை ஒழித்த கீழோர், எப்போதும் அழிதலின்றித் தாமே) வாழ நினைத்து (அதற்காக வருந்தும் கீழோர், நீதியும் தருமமும் இல்லாத (அல்லது அழித்த) கீழேர், குற்றமும் ஆணவமும் மிக்குள்ள கீழோர் - (பாச) வலையினால் - ஆசை GLIČITКатULLЛГTool) (உலக) மாயையில் நின்று வருந்துகின்ற கீழோர், தேவர்களின் (கடவுளரின்) சொத்தை அபகரித்த கீழோர் . ஆகிய இவர்கள் யாவரும் - வேதனைக்கு இடமாகிய - யமனார் வருத் துகின்ற (நரகக்) கு ழி யில் விழுவார்கள் ; மராமரம் ஏழும், வலிமை மிக்க குரங்காகிய வாலியும், (அம்பரமும்) கடலும், சிறந்த பரம்பரையில் சம்ப்ரதாயத்தில் வந்த ராவணனும், அவனது சதுரங்க சேனைகளிருந்த (யானை, தேர் குதிரை, காலாட்படை இருந்த) இலங்கையும் எல்லாம் முன்பு வலிமை குன்றி அழியும்படியும், சந்திரனும் சிவ சூரியனும் தேவர்களும் தத்த்ம் பதவியில்ே நிலைபெற 'ராமசரம்" என்னும் ராம மந்திரம் கூடிய அம்பைச் செலுத்தின் சிறப்புற்ற மூர்த்தியாகிய பூரீராமபிரானது அழகிய மருகனே! கோழி ஒலி செய்ய, அழகுமிக்க தோகையையுடைய மயில் நடனம் செய்ய மேகங்கள் தங்கிய கோபுரங்கள் எங்கும் விளங்குகின்ற மங்களகரமான வயலூர் வாசன்ே! அழகிய ಳ್ದ தொண்டர்களும், மண்டலாதி. பர்களும், வேலன்' என்கின்ற பெயரை அன்புடனே புகழ்கின்ற பெருமாளே கோடை.எனும் பதியில் வந்துள்ள பெருமாளே! இந்திரர்களுக்குப் பெருமாளே! (குண்டர்கள் நமன்தன்.குழிவிழுவாரே)