உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை நகள் திருப்புகழ் உரை 143 712. ஒவ்வொருவர் தோள்மேலும் (தப்பாமல்) சரியான தோய்த்ல் உற (பாணி) கையாற் பற்றிச் சூழுதல் நெருங்கிச் (சூழ்ந்திருந்து) அழுகின்றவரும். துாரப் போகும்படி கோரமான கனத்த சூலத்தையும் பாசக்கயிற்றையும் கொண்ட (சமன்) எமன், (ஆரும்) வந்து பொருந்துவான் வந்த சேர்வான் - (அப்போது) பாடை (கூட) கட்டப்பட்டு (தீயில் தேறி) நெருப்பில் கூட்டப்பட்டு பாழ் அடைந்து குலைந்து அழிந்துபோகாமல் (உலக) ஆசைகளிற் கட்டுண்ட என்னை (உனது) (தேசு) ஒளி, (உற்று பொன் ஆர் பாதத்தே) பொருந்தி அழகு நிறைந்த திருவடியில் (வைத்து) சேர வைத்து அருள் புரிவாயாக (அல்லது) தேசு (ஞான ஒளி) ஞானம் உற்றார் (உள்ளவர்) தேசுற்றார் - ஞானிகளின் திருவடியிற் சேர்த்து வைத்து அருள் புரிவாயாக (ஆடல்) போர் புரிந்த சூரன் கேடுற்று (அவன் சென்று மாமரமாய்க் கிடந்த) கடலிலே, (ஆர) வுேம் (சீறி) கோபித்துச் சண்டை செய்த வேலனே! (ஆனைச் சேனை) தெய்வயானையாம் தேவசேனைக்கும், (கானில் தேனுக்கு) வனத்தில் வாழ்ந்த தேன்போன்ற வள்ளிக்கும் (ஆரம்) முத்து மாலையையும், (தாரை) கடப்ப மாலையையும் தந்த வீரனே! (அல்லது) ஆனைகளின் (சேனை) கூட்டம் நிறைந்த - மிக்கிருந்த கானில் - வள்ளிமலைக் காட்டில், தேனுக்கு - தேன்போன்ற வள்ளிக்கு (ஆரத்தாரை) முத்து. மாலையைத் தந்த வீரனே! (கூடற்பாடி) கூடல் நகரில் உள்ள (கோவை) சிவபிரானைப், (பாவை) தேவி அங்கயற்கண்ணியுடன் கூட ஒன்று சேர்த்துப் பாடித் திரிந்த வள்ளலே! அழகிய நெல்லின் பொழில்கள் உள்ள நல் ஒழுக்கத்தார்கள் உள்ள கோடையில் தெய்வப் பெருமாளே! (பாதத்தே - வைத்தருள்வாயே)