பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/966

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செங்காட்டங்குடி) திருப்புகழ் உரை 407 உலகங்களைத் தந்த பச்சைநிற உமையம்மையின் அண்ணனும், வடவேங்கடம் என்னும் தலத்தில் வீற்றிருப். பவனும், மேலான சாரங்கம் (வில்), சக்கரம் (சுதரிசனம்) இவைதமைக் கையகத்தே கொண்டுள்ளவனும் ஆன திருமாலின் மருகனே! முப்புரங்களுக்கு (அந்தகனாயிருந்த) யமனாயிருந்த (திரிபுரத்தை அழித்த) சிவபிரானுக்கு (வர சுத) சிரேஷ்டமான பிள்ளையே! ரதியின் கணவன் மன்மதனுக்கு மைத்துன முறை உடையவனே! முருகனே! பராக்ரமம் வாய்ந்த சுப் பிரமணியனே! வடிண்முகனே! வேலனே! அலைகள் பாயும் தாமரைத் தடாகங்கள் உள்ள வயலூர் அரசே! முத்தியைத் தருவதான திருவாஞ்சியம் என்னும் தலத்தில் தேவர்கள் பெருமாளே! (உன் அடிதொழ நினையாரே) திருச்செங்காட்டங்குடி 817. (மார்பிலணி வங்கார தாரொடு) மார்பில் அணிந்துள்ள (வங்கார தார்) பொன்மாலையுடனே மேலான மலையன்ன கொங்கைகள் அசைய, (பூங்கொத்துக்கள் நிறைந்த மாலையணிந்துள்ள கூந்தலும் (ஹாரம்) மணிமாலையும் தோளிற் புரன்டசைய, வளப்பம் உள்ள காதிலே ஓலை (க்ாதணி) சூரிய ஒளி போன்ற ஒளியை விச, வாயிதழ். (குமுத) மலர்போல விளங்க. (406ஆம் பக்கத் தொடர்ச்சி) காசியில் இறந்த உயிருக்கு வயிரவர் சூலத்தழுத்தும் வாதனை சிறிது உண்டு. அதுவும் கிடையாது திருவாஞ்சியத்தில் இறப்போர்க்கு ஆதலால் இத்தலம் காசியினும் சிறந்ததென்று தலபுராணம் கூ றும்: செயிரறு காசி முத்தி சிறந்திடும் இறந்த மாக்கட் கயின்முனை நெடிய மூலத் தழுந்துநோய் சிறிதுண் டந்த வயிரவ வாதை தானும் இல்லை.அந் நகரின் மாய்ந்த உயிர்வலச் செவிக்கெழுத்தைத் துரைத்தரன் அளிப்பன் முத்தி"

    • வங்காரம் - பொன்.