பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 91 குருக்ஷேத்திரம் (முள்) களரிபடவும் (பாழ்நிலமாகவும்), அல்லது குருமகிதலம் உட்பட இடம் குருக்ஷேத்திரமாக தமது திருவுள்ளம் (கோணாது) நெறிமுறையில் நிற்கவும், அரசர்கள் யாவரும் இறந்துபடவும் (அருச்சுனனுடைய) விளக்கமுற்ற தேரைச் செலுத்தின திருமாலுக்கு மருகனே! கச்சிப் பெருமாளே! (சத்திய வடிவினை மாயாமற்குப் புகல்வாயே) 482. கல கல என்று அழகிய சிவந்த பாத கிண்கிணியும், சிலம்பும் தாள ஒத்துப்போல் "தாந்தனா" என்று ஒலிக்கத் தாமரை போன்ற கைகள் அதற்குச் சரி ஒப்பாக அமையத் "தாந்தோம்" என ஆடல் பயில்கின்ற தந்திரத்தினர்-பசுமை (செழிப்பு) வாய்ந்த அல்குல் விரிந்து காந்தளை நிகர்ப்ப ஒரு பிடி அளவே உள்ள இடையிற் பட்டாடை பொருந்திய (அல்லது) காந்தள் போன்ற கையால் இடை பிடி படும்படியும்) ஆலிலை போன்ற வயிற்றுடனும் கனத்த கொங்கைகள் அழகு தந்து விளங்கும் மார்புடனும் (முத்து) மாலை அசைய, சலசல சஜ்ஜ என்று ஒலிக்கும் சிவந்த கையில் அணிந்துள்ள வளையல்களையும் நறுமணம் வீசும் பச்சைப் *(பொட்டு) பொருந்தி விளங்கும் தாமரையன்ன முகத்தில் உள்ள வாள் போன்ற கண்கள் சுழன்று அசைய முத்துப்போன்ற பற்கள் ஒளி வீசச் செவ்வாம்பல் போன்ற வாயிதழ்களைக் கொண்டவர்கள், சிறந்த மேகம் போன்ற திருந்திய கூந்தலைக் (கொண்டவர்கள்) சரசம் (காமலிலைப் பேச்சுகளைப்) பேசிச் சேர்கின்ற மாமிசம் உண்போர் ஆகிய இத்தன்மைய பொது மாதர்களுடைய சம்பந்தம் நன்றா! நன்றன்று என்றபடி