பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 157 மழலைச் சொற்களை உடைய திருவாயை உடைய குருபர மூர்த்திய்ே ஆறெழுத்துக்கு உரியவனே நேர்மை கொண்ட நெறி தவறாத வடிவத்தனே (அல்லது) அரூபா - வடிவே இல்லாதவனே! (அல்லது) கோடா ரூபா. கோடானு கோடி-பலகோடியான உருவத்தனே! அருவத்தனே' (பார் ஈ) உலகை ஈந்தவனே' (படைத்தவனே!) (சதம்) நூறு வேள்வி - நூறு அசுவமேத யாகங்களை முடித்தவனும், குலிசாயுதத்தை ஏந்தினவனுமாய அரசன் - இந்திரனுடைய (பொன்) உலகைக் காத்தருளின தலைவனே தேவனே! (செவ்) வேளே! தேவர் பெருமாளே! (நீ மீள் என வேணும்) 1065. (எங்கள் வீட்டுக்கு வருவீர்களாக என்று அழைக்கும் (விரகர்) சாமர்த்தியசாலிகள் - தந்திரக்காரிகள், கண்கள் வர்ள்ோ, வேலோ, சேல் மீனோ, மான் விழியோ என்னும் படியான மாதர்கள் - (இவர் தம்) மனம் எவ்வளவு இருள் சூழ்ந்திருக்கின்றதோ அவ்வாறு சூழ்ந்த கருநிறம் உள்ள கூட்டமான் கூந்தலானது (வானோ) கரிய மேகமோ, காடோ, அழிதலிலாத திருமாலின் (கரிய்) வடிவம் தானோ (என்றும்), உண்ணத்தக்க பாற்கடலில் உள்ளதும், நறுமணம் நிறைந்த மான பாலோ, தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ - பவளம் போலச் சிவந்த வாயில் நின்று எழும் குளிர்ந்த (மொழி) பேச்சுக்கள் (எனா) என்றும், (கவி பாட்ா) பாட்டுக்களைப் பாடி அடி :: நான் ஈடேறாம்லே அழிந்து போவேனோ! சமீபத்தில் பார்வதி ಶ್ಗ கருதி நோக்க கல்லால மரத்தின் கீ舒ழ் வீற்றிருப்பவரான சிவபிரான்து ಘೀ கோகோ என்று (அசுரர்கள்) அலறும்படிச் சென்று - அசுரர்கள் அலறிக் கூச்சலிடவும், கடல் திப்பட்டு எரியவும், 'ஹா ஹா! சூரா போகாதே - (மீள்) இப்படி மீண்டு வா' என்று குருகுபேர் - கிரவுஞ்சம் என்னும் பேரைக் கொண்ட மலையூடுருவச் செலுத்தின கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் செய்து + குலிசாயுதத்தை ஏந்தின (அரசன்) இந்திரனுடைய உலகைக் காத்தருளின தலைவனே தேவனே வேளே தேவர் பெருமாளே! == (ஈடேறாதே ஒழிவேனோ) ്ബുബ്ബണ്ടെ பொருத்து: சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா" - திருப்புகழ். 1045