உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 முருகவேள் திருமுறை 17 - திருமுறை திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த சிறைமீள விட்ட பெருமாளே (78) 1073. பிறவி அற தனத்த தந்தனம் தனத்த தந்தனம் தனத்த தந்தனம் தனதான புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென் புனத்தி லன்றுசென் றுறவாடிப். புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததினன் புதிக்கு ரும்பைமென் புயமீதே, செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன் 1 திளைக்கு நின்திறம் புகலாதிந் த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந் தியக்க மென்றொழிந் திடுவேனோ, குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங் குவட்டி லங்கையுந் துகளாகக் கொதித்த கொண்டலுந் த்ரியசு, ருங்கடங் கொதித்து மண்டுவெம் பகையோடத்; துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந் துரத்த னும்பிறந் திறவாத சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந் துதிக்கு மும்பர்தம் பெருமாளே (79) 'உலகோர்க்கு - வள்ளிச் சன்மார்க்கம்" - உய்யும் வழியைக் காட்டுதலால் - "புரக்க வந்த நம் குறக் கரும்பு" என்றார்: வள்ளிச் சன்மார்க்கத்தின் விளக்கத்தை - பாடல் 317-பக்கம் 288 கீழ்க் குறிப்பிற் காண்க 1 திளைக்கும் நின் திறம் . வள்ளியை வலிய ஆட்கொண்ட கருணைத் திறம் " யான்" கொட்கு மறு நீங்கிப் பத்தி செய்வோர்க்கு ஏவல் செய்யும் பணியாளன் ஈசன் என்னும் இன்ப நிலை காட்டுதற்கே" முருகன் வள்ளியை விரும்பினதும் வணங்கினதும்; அடியார்க்கு எளியனாம் அத்தன்மையால் முருகன் புகழ் மேலோங்கியது. இதனைத் " திருப்புகழ்க் குயிர்ப் பளித்து எழிற்றினைக் கிரிப்புறத்து உறை வேலா" - என்றார் பாடல் 253-ல் (பக்கம் 133 கீழ்க் குறிப்பைப் பார்க்க); பாடல் 1074 அடி 3-ம் பார்க்க