உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புக| ம ன וויוו 1078. (திரிபுரம் அதனை) திரிபுரங்களை (அல்லது திரிபுரம் மதனை திரிபுரத்தையும் மன்மதனையும்) ஒரு நொடிப் பொழுதில் எரித்தருளிய சிவனது செல்வமே! கோபம் நிறைந்த அசுரர்களின் மனம் அச்சம் உற மயிலை முடுகிச் செலுத்துபவனே! பெரிய கிரவுஞ்ச மலையில் ஊடுருவும்படிச் செலுத்தின கூரிய வேலனே! ஆறு திரு முகங்களை உடைய வடிவேலனே! (பசலை) காம நோயால் உண்டாகும் நிற வேற்றுமையுடன் உன்னை அணைகின்ற இள முலை கொண்ட (என்) மகளை மன்மதன் செலுத்தும் பானங்கள் தொட்டு நலிவு செய்யலாமா? (நலிவு செய்தல் கூடாது நீ அவளை விட்டுப் பிரியலாகாது - என்றபடி) யானையின் அழகிய முகமும், விசாலமான பெரிய வயிறும் உடைய கணபதியின் பின்பு தோன்றினவனே (தம்பியே): கனத்த கொங்கைகளை உடைய குறவர் மகள் - வள்ளியைக் கருணையுடன் அணைந்த அழகிய திரு மார்பனே! பாம்பணையில் துயிலுகின்ற திருமாலின் திரு மருகனே! உலகெலாம் உடையவனே! அடியார்களின் வினைகளும், தேவர்களின் துயரமும் ஒழியும் படி அருள் பாலித்த பெருமாளே! (மகளை மதன் விடு பகழி தொடலாமோ) 1079. புனுகு சட்டம், அகில், கலவைச் சாந்து, ஒளி வீசும் முத்து மாலை, ரத்ன மாலை பலவும் நெருங்க வட திசையில் உள்ள மேரு LIXINGNUGRINШ – 1. பசலை பாடல் 1006-பக்கம் 32 கீழ்க்குறிப்பு 4. கணபதிக்கு இடமுடை வயிறு: "குறுந் தாளும் பெருந் தொந்தி நிறைவும்" ஆதிபுரி புரா. "கய வதனமும். பெரு வயிறும் குறிய தாளும்" - வீரவனப் புராணம் X" அணிசெயுமருதமலையோனே"-என்றும்பாடம் கொள்வர் கடவுள் உலகு உடையார். "இப் பாரெலாம் உடையானை", எல்லாமாம் எம் பெருமான்". சம்பந்தர் 2-164, 9