பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 முருகவேள் திருமுறை (7- திருமுறை பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய் fமுற்பால் வெற்பிற் புனமானைப். பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா தத்தாள் பற்றிப் புகல்வோனே, +முக்கோ ணத்தா னத்தா ளைப்பால் வைத்தார் முத்தச் சிறியோனே.

  • மெய்க் கோணிப் போய் . இரத்தலின் போது உடல் கோணிக் குறுகும்; அதனால்தான் மாவலியிடம் திருமால் இரக்க வேண்டியவழி (வாமணராய்)க் குறுகின உடலினராய்ச் சென்றனர் என்று நயம்படக் கூறுவர் அறிஞர். இங்கு வள்ளியிடம் இரக்கச் சென்று முருகவேளின் (மெய்) உடலும் கோணிக் குறுகிற்று.

"ஒருத்தி காதல் வலைப்படு கின்றான் போல வருந்தியே இரங்கா நின்றான்" - முருகன் என்றார் கந்த புராணத்தில் 6.24.73. இரத்தலின் போதுள்ள மெய்ப் பாட்டியலைப் "பல்லெலாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச் சொல்லெலாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி மல்லெலாம் அகல ஒட்டி மானமென் பதனை வீட்டி இல்லெலாம் இரத்தல் அந்தோ இழிவிழி வெந்த ஞான்றும்" - எனவரும் குசேலோ பாக்கியானப் பாடல் நன்கு விளக்கும். f முற்பால் வெற்பு - பாடல் 1124 உரைக் குறிப்பைப்பார்க்க # முக்கோணத் தானத்தாள் - தேவி முக்கோணத்தாள். நவ கோணத்தாள். "ஓங்காரத் துட்பொருளே! உற்ற நவகோணத்தில் ஈங்காரந் தன்னில் இருப்பவளே! - பாங்கான முக்கோணத் துள்ளிருக்கும் மூர்த்தியே" - மீனாட்சியம்மை கலிவெண்பா 11, 12 "த்ரி கோணாந்த்ர தீபிகாயை நம"- லலிதா ஸஹஸ்ரநாமம். 597 " ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே" . அபிராமி அந்தாதி, 19 " விற்றிருப்பாள் நவகோணத்திலே" - வராகி மாலை, 31. தேவியைப் பாகத்தில் வைத்தவர் முத்தமிடும் சிறியோனே என்றார்: 1125ஆம் பாடலிலும் இந்தப் பாடலிலும் சிவன் - தேவி இருவரையும் உடன் கூறியே முருகனை முத்தமிடுதல் கூறப்பட்டுள்ளது: 1125ஆம் பாடலில் சிவனை முற்கூறித் தேவி முத்தமிடுதல் கூறப்பட்டுள்ளது.