உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 351 (ஒதி) கற்று, மிக்க (தவத்தவர்க்கு மிகுந்த தவநெறியில் நிற்கும் பெரியோர்களுக்கும் (இடர் ஒகை) துன்பத்தையும் இன்பத்தையும் (வருத்தத்தையும் மகிழ்ச்சியையும்) கொடுத்து, (வடுப்படுத்து) தனது அடையாளத்தை அவர்கள் மனத்தில் தழும்பு படும்படி நன்குபதியும்படிச் செய்து ( அகியூடு) பாம்பினிடத்துள்ள, விஷம் போன்ற விஷத்தை (இருத்தி வைத்த) தங்கும்படிச் செய்த கன் என்கின்ற அம்பு கொண்டு (மாலை மயக்கை) காம மயக்கத்தை விளைவித்து (தம்மிடம் வந்தவர்களுடைய) நல்ல செல்வப் பொருள்களை எல்லாம் நறு மண்ம் கொண்ட தமது கொங்கையின் சத்தியால் கவர்ந்து அகப்படத் செய்து, (இல் வா என) எங்கள் வீட்டுக்கு வருக என (முற்றி நடத்தி) முழுதும் வசப் படுத்தி அழைத்துக் கொண்டு போய் (உள்புகும் அந்த மாத்ர்) வீட்டுக்குள் செல்லும் அந்த விலை மாதர்களின் மாயவித்தையாம் காம மயக்கத்தை ஒழித்து, (மெத்தென) பக்குவமாகத் தேவர்களுக்கு அருள் பாலித்த (அகூடிரவாய்மை) ஏழுத்துண்மையை (ஐந்தெழுத்து அல்லது ஆறெழுத்து பஞ்சாகூடிரம் அல்லது சடாகூடிரத்தின் உண்மைப் பொருளை) (எனக்கும் அடியேனுக்கும் (இனித்து மகிழ்ச்சியுடன் உபதேசித்து (அங்ங்னம்) உனது திருவருள் பாலிக்கப்படாதோ' (வேலை அடைக்க அரிக்குலத்தொடு வேனும் எனச் சொல்லும் அக்கணத்தினில்) வேலை அடைக்க வேணுமென கடலை அணையிட்டு அடைக்க வேண்டும் என்று (அரிக்குலத்தோடு) வானரக் கூட்டங்களுடன் - சொன்ன அந்த கூடிணத்திலேயே, வேகமொடு - அதிக வேகத்துடன் (அப்பு அந்தக் கடல் நீரில் மலைகளின் குவியல்களை நளன் என்னும் வானரத் தச்சன் தன் கை கொண்டு மேலும் மேலும். வீசி எறிய, அந்தக் - குன்றுகளைப் பொருந்தும்படி இணைத்து அணைத்து, அணையாகச் செய்து, அந்த அணை மேல் (மேவி நடந்து சென்று. (அரக்கர் பதிக்குள்) அரக்கர்கள் வாசம் செய்திருந்த இலங்கைப் பதியில் முற்பட்டுச் சேர்ந்து, (அங்கு) (வீடணனுக்கு) விபீஷணனுக்கு (அருள் வைத்து) அபயம் தந்து அருள் புரிந்து (அவற் றமையன்கள் - அவன் தமையன்கள்) அவனுடைய அண்ணன் மார்களாகிய கும்பகர்ணனும், இராவணனும் இறந்தொழியும்படி