பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/429

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 421 (உரகம்) ஆதிசேஷனுடைய (பணை பந்தி) பெருமை வாய்ந்த (படக்) கூட்டம்ாகிய முடியின்மேல் தாங்கப்பட்ட எல்லா உலகங்களையும் (தரும்) தந்த (அமோகப் பார்ப்பதி) மருள் இலாத பார்வதி தேவியைத் தனது உருவில் (பங்கு ஒரு பாகத்தில் உடையவனும், (நாகத்தை) பாம்பைக் காப்பாக - கங்கணமாக அணிந்துள்ளவனுமான சிவபிரானும் உறி மீது தாவின ஒரு திருட்டுத் தனத்தைக் கண்டு (தனி ஒப்பற்ற) மிகுந்த கோபம் கொண்டவர்களான (ஆய்க்குல மகளிர்) இடையர் குலத்து பெண்கள் சிறிய (தும்பு கொண்டு கயிறு கொண்டு மோதிக் கட்டி வைத்த உரலுடன் தவழ்ந்த (நவநீதம்) வெண்ணெய் உண்டவன் என்னும் (கூற்றனும்) பேச்சுக்கு இடம் தந்தவனும் - வெண்ணெய் உண்டவன் என்று பேசப்படுபவனும், மிக்க கோபத்தைக் கொண்டதும் . (கர) துதிக்கையை உடையதும் (விகடம்) அழகு உடையதும், (வெம் கடம்) கொடிய மதத்தைத் தரும் (கபோலம்) கன்னத்தை உடையதும், போருக்கு அமைந்ததுமான (கிரி) மலைபோன்ற ஐராவதம் என்னும் வெள்ளை ஆனையைச் செலுத்தும் (புரந்தரனும்) ரனும், வேளை - பெருமானாம் செவ்வேளைப் (போற்றுகை) துதித்து வணங்குதல் (கருமம் என) நமது கடமைச் செயலாகும் என்று உணர்ந்து வந்து வணங்க, (வேதப் பால் பதி பிறியாத வேதப் பிரணவத்திற் பதிப்பொருள் விளங்கப் பெறாத (கடவுள்) தேவனாம் பிரமனை (முனிந்து) கோபித்தும், தேவர்களுடைய ஊரைப் பொன்னுலகைக் காத்தும், உயரமுள்ளதும் (கரவட) வஞ்சகம் நிறைந்ததுவுமான கிரவுஞ்ச கிரி (சாய) மாண்டொழியவும், தோற்றுப்போய் ஏழு கடல்களும் பெருக்கு எடுத்ததுபோல, (உடைந்து) சிதறுண்டு அசுரர்கள் யாவரும் ஒட்டம் பிடிக்கும்படியும் எதிர்த்து மோதின. பெருமாளே! (காப்பதும் ஒரு நாளே) 1173. குற்றமில்லாத நல்ல வகையில் (பல நூல்களை) ஓதி (கடந்து) மாயை ஆதிய தடைகளைக் கடந்து, பகையாக வரும் வினைகளை முற்றும் (துறந்து) உதறித் தள்ளி, பல பல வகையான யோக மார்க்கங்களை அநுட்டித்திருந்தும், மன்மத ராஜனாம் காமனுடைய, நறுமணம் வீசும் பானங்களால் (அயர்ந்து) மனக் கவலையும் சோர்வும் கொண்டு, பனைமடல் ஏறுதற்கும் இணங்கிப், பரிதவித்து மிகவும் மனம் நொந்து-காம இச்சை மிகுதிப்பட