பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 435 (மனக்) கலக்கத்தைத் தரும் இப்பூமியில் (உள்ள) எனக்கு விதிக்கப்பட்டுள்ள ( பணிவிடை) தொண்டுக்கு என்று ஏற்பட்டுள்ள கன்னக்கின் அளவு (அடியேன் செய்யும்படி விதிக்கப்பட்ட தொண்டு இவ்வளவு என்று உள்ளதான ஒரு கணக்கு). (உனது) திருவுள்ளத்துக்குத் தெரியாதா (உனது திருவுள்ளம் அறிந்ததே ஆம் என்றபடி) சிவனிடத்தே தோன்றிய (அல்லது மங்கலப் பொருளாய) சுவாமி, மயிலின் மீது நடனஞ் செய்யும் சுவாமி, எம்முடைய உள்ளத்திலே சிறப்பாக @ (D சுவாமி, (தனது) திருவுருவத்தின் பேரொளி (அடியார்கள்) காணும்படி விளக்கமுறும் சுவாமி, பிறவியை அடியோடு தொலைத்தருளும் சுவாமி, பாவங்களைக் குலைத்து எறியும் சுவாமி, முநிவர்கள் செய்யும் தவப்பொருளாய் (விளங்கும்) சுவாமி (அடியார்கள்) புரியும் பிழைக்ளைப் பொறுத்தருளும் சுவாமி, (குடிநிலைதரிக்கும்) தேவிர்களை விண்ணிற் குடியேற்றுவித்து அங்கு நிலைக்கும்படி வைத்த சுவாமி அசுரர்களைப் பொடி யாகும்படிச் (சதைத்த) நெரித்து அழித்த சுவாமி, எமக்குத் தொண்டு (யாழ் செய்யவேண்டிய த்ொன்டு இன்னதென்று விதித்துள்ள சுவாமி சரவணத்தில் தோன்றியவரும் . தகப்பனுக்கும் குருமூர்த்தியான வருமான சுவாமி - என்றெல்லாம் விளங்குகின்ற - என்றெல்லாம் புகழத்தக்க பெருமாளே! (எனக்குண்டாகு பணிவிடை திருவுளம் அறியாதோ) 1179. (பூசல் தரும் கயலும்) சண்டை செய்யும் கயல் மீன்போல விளங்கும் கண்களையும், பொருந்தியுள்ள நறுமணம் வீசம் கூந்தலையும், விளககமுறும் பூரண குடம் என்று சொல்லத்தக்க கொங்கைக்ளையும் கொண்ட இளம் பெண்களின் போகம் அடங்கலையும் (போகம் அடங்கலும்) காமசுகம் முழுமையும் கொண்டு அனுபவித்து, காமப்பற்று நிரம்பிவர, அதனால் ஏற்படும் பெரும் பிழைகள் நீங்கிப் போகும்படியாக (அந்த ஒப்பற்ற பரம்பொருளை) அன்புடன் நினைக்காமல் (ുങ്ങ് யெனும்படியும்) ஆசை எப்படி எப்படிப் போகின்றதோ அப்படி அப்படியே (என்னுடைய) தனங்களும் செவ்வமும், (ஒகை) மகிழ்ச்சியும் (நடந்திட) செல்ல - செலவு கொள்ள, (தினங்களும்) நாள்தோறும், (ஆருடனும்) எலலாருடனும் பன்மை பூண்டு நிற்கும்படி (நடமாடி) இவ்வுலகில்) உலவி