பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 5 15 (மூசு கானத்துமீது (சிள் வண்டுகள்) மொய்க்கும் காட்டிலே (அல்லது - வள்ளியை நாடி நீ - மோப்பம் பிடித்துச் சென்ற காட்டிலே - வாழ்ந்திருந்த முத்துப்போல அழகிய (மூரல்) பற்களைக் கொண்ட (வேடிச்சி) வேட்டுவப் பெண் - வள்ளியின் கொங்கைப் பாரத்தில் - முழுகி அ ந்திக் கிடக்கும் (நீபப் ப்ரதாப) கடப்ப மாலையைச் சிறப்புடன் § (மார்ப அத்த) மார்பை உடைய ஐயனே! (மூரி) வலிமையை உடைய (வேழத்தின்) ஐராவத ஆனை வளர்த்த மயில் அனைய தேவசேனையின் கணவனே! (வீசு) அலை வீசுவதும் (மீனம்) மீன்கள் நிறைந்ததுமான (அல்லது மீன்களை அல்ைகளில் வீசி எறியும்) (பயோதி) கடல் (வாய்விட்டு வேக ஒலிசெய்து வேவ வெந்து வற்றவும் (வேதித்து வரு தேவர்களை வருத்திவந்த பெரிய சூரன் (அல்லது மாமரமாய் நின்ற சூரன்) வீழ அழிபட்டு விழவும், தாக்கி, பருத்த அடிப் பாகத்தை உடைய (நாகத்து மலையாகிய கிரவுஞ்சத்தின்மீது வீரம் பொருந்திய வேலாயுதத்தைச் செலுத்தின. பெருமாளே! (மாலை. ப்ரவாள பாதத்தில் அணிவேனோ) 1212. ஆசையை நன்கு ட்டி (வெகுவாக) வெகு பக்குவமாகப் (பசப்பி) இன்முகம், இனிய பேச்சு - காட்டி வஞ்சித்து வரும் வரவேண்டிய - ஆடைப் பணத்தை ஆடை வகைகளையும், பணத்தொகையையும் (அல்லது மாடைப் பண்த்தை) பொற்காசினை (எடு'என் உறவாடி) எடுத்துத் தா என்று நண்புப் பேச்சுக்கள் பேசி (ஆரக் கழுத்து) முத்து மாலை அணிந்த கழுத்தையும் கொங்கை தங்கு மார்பையும் குலுக்கி (விழி ஆட) கண்கள் அசைய, சிறப்புள்ள மயில்போல உலவியும், கிளிபோலப், பேசியும், சிரித்தும், தலை மயிரை ஆய்ந்தும், அவிழ்த்தும், முடிந்தும், பேதைப்படுத்தி (எனக்கு) பேதைமையை ஊட்டி - என்னை அஞ்ஞானத்துக்கு ஆளாக்கி, மயக்கத்தைத் தருகின்ற மாதர்களின் பீறல் - கிழிபட்டது போன்ற சலத்து வழி மூத்திரம் நீர் வரும் வழியை (அல்குலை) நாறப்படுத்தி - வெளிக்காட்டி என்னைப் (பீடை படுத்தும்) துன்பத்துக்கு ஆளாக்கும், மயல் - காம மயக்கம் (ஒழியாதோ) என்னை விட்டு நீங்காதோ!