பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/547

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 539 (கக்கி) வெளிப் படுத்தித் (தேக்கு நிரம்பினதாய் (செக்கர்) செந்நிறத்ததாய், போர் - கயல் - கண் போர்க்கு உற்றதாய்க் கயல் மீன் போன்றத்ான கண்களின் மீதும் - கூற்றில் பேச்சுக்களின் மீதும் (மயலாகி) காம மயக்கம் கொண்டவனாய் (அச்சக் கூச்சம் அற்று) பயமும், நாணமும் இல்லாது போய் (கேட்டவர்க்கு) என்னைப் பற்றி விசாரிப்பவர்களிடம் (என்னைத்) துார்த்தன் என - இவன் காமுகன் - பரத்தமை கொண்டொழுகு வோன் என்று பலரும் கூறத் தினந்தோறும் - (அத்தப் பேற்றில்) பொன் பொருள் பெறுவதிலேயே (இச்சிப்பார்க்கு) இச்சை - ஆசை கொள்ளும் அவர் மீது (விலை மகளிர் மீது) அற సే (பித்தாய் - காமப்பித்துக் கொண்டவனாய் (நான்) திரிதல் நன்றா திரிதல் அடாது என்றபடி, (பச்சைக் கூத்தர்) பச்சை நிற முடையவரும் - காளிங்கன் என்னும் பாம்பின் மீது நடித்தவருமான திருமால் மெச்சி மெச்ச புகழ்ந்து போற்றவும் சேத்த சிவந்த பத்மக்கூட்டில் தாமரை ஆசனத்தில் (உறைவோர்) வீற்றிருக்கும் பிரமன், (இபத்தில் சேர்) வெள்ளை யானையின்மீது ஏறும் (பல் சக்கில் கூட்டர்) பல (ஆயிரம்) கண்களோடு கூடிய இந்திரன், (பத்தக் கூட்டர்) பக்த ஜனக் கூட்டங்கள் (இயல் வானம்) தகுதி வாய்ந்த விண்ணுலகத்தவர் ஆகிய இவர்கள் மெச்சிப் போற்ற - புகழ்ந்து போற்றவும் (வெற்பு) கிரவுஞ்ச கிரி தோற்றுப் போய் நாணம் கொள்ளவும் (கோத்த கடல்மீதே) உலகுக்கு ஆடையாக அமைந்துள்ள (சூழ்ந்துள்ள) கடலிடையே நிரம்பக் காய்த்த (கொக்கு மாமரத்தின் (கோட்டை) கொம்புகளை வெட்டிச் சாய்த்த-வெட்டி-அழித்த பெருமாளே! (பித்தாய்த் திரியலாமோ) 1225. கடலைக் காட்டிலும் பெரிய கண்கள், மலையைக் காட்டிலும் பெரிய கொங்கை இனும் - பின்னும் கவர் (இதழ் ஊறலை) நுகர்தலுக்கு உரிய (துவர் அதரம்) பவளம் போன்ற சிவந்த வாயிதழ் அல்லது துவரினும் கவர் அதரம் பவளத்தினும் அதிக கவர்ச்சியுடைய வாயிதழ், இரண்டு தோள்கள் பசுமை வாய்ந்த

  • கண் - சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரம் சேர எண்ணி மால்வாங்கி ஏங்கிமயங்காமல்" - கந்தரலங் 77.