பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந் த1 ந்தா தி 1 71 24. வெறி விலக்கல் செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட செகம்புர வாதிங்ங்ண் செய்ததென் னோமயல் செய்யவன்பு செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கயங்க செகம்புர வாமுரல் செந்துார வென்னத் தெளிதருமே. (ப உ) செகம் - உலகத்திலும், புர ஊரிலுமுள்ள வார் - ஒழுங்கான, கிளையெல்லாம்-சுற்றத்தா ரெல்லாரும், மருண்டு-மயங்கி, திரண்டுகொண்டு கூடிக்கொண்டு, அசெ ஆட்டினுடைய, கம் தலையை, புரவாது - காப்பாற்றாமல், இங்ங்ன் இவ்விடத்தில், செய்வதென்னோ - வெறியாடற் செய்ய நினைப்பதென்ன விபரீதம், மயல் - (கைக்கிளையாக மயங்கிய இம்மாதின்) விரகதாபம், செய்ய - சிவந்தவன் வலிய, புசெகம்- ஆதிசேடனை, புர வாசமென. [LITT@H இடமாய்க்கொண்டு, துயில்வார் - திருக்கண் வளர்கின்ற, திருமால், செப்பு புகழ்கின்ற, அபங்க பங்கமிலாதவனே! பங்கசெ - தாமரைத் தடாகத்தில், கம்பு - சங்கினங்கள், உரவா உரக்க, முரல் சப்திக்கின்ற, செந்துார - திருச்செந்திற் பதியோனே, என்ன - என்று சொல்லில், தெளிதரும் - (அக்ஷணமே) தீர்ந்து விடுவது நிச்சயம் (எறு) மயில் எழுவாய்.தெளிந்திடும்-பயனிலை.ஏ-அசை (க உ) பந்துக்களெல்லாரும் மயங்கி வீணாய் ஆட்டைப் பலியிடுவதால் இவள் மையல் தணியுமோ? (தணியாது), திருமால் புகழத்தக்க மாசற்றவனே! செந்தூரனே! என்று சொல்லில் தணிந்திடும். (கு.உ) இச்செய்யுள் வெறி விலக்கல்' என்னுந்துறை (1) வெறி விலக்கல்' - என்பது - தலைவிக்குக் காமத்தால் உண்டான நோயை வேறு காரணத்தால் உண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்க வேண்டிச் செய்யும் வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறும் அகத் துறை வெறியாட்டு வேடனாடல்: முருகக்கடவுள் ஆவேசிப்ப வேலன் (முருக பூசனை செய்பவன்) ஆடும் கூத்து தலைவியின் நோய்க்குத் தலைவன் உண்மைக் காரணமாக இருக்க, வீணாக ஆட்டை ஏன் வேலனைக்கொண்டு பலியிடுகின்றீர்கள் - வெறியாட்டு வேண்டாம் - எனக் கூறித் தோழி வெறியாடலை விலக்குவது வெறி விலக்கல் ஐங்குறுநூறு - 241.250 குறுந்தொகை -362 பார்க்க