பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 முருகவேள் திருமுறை I ஆம் திருமுறை இரக்கும்படி செய்கின்றதாகிய, ஒர் ஒப்பற்ற, தினம் வறுமை நோயானது, தினத்தும் - நாடோறும், உதராணலம் - வயிற்றுப் பசியாக்கினி, சுட. தகிக்கும்போது சேர்ந்து (அதனுடன் சேர்ந்து, கடும் தகிக்கின்றது. தி இக் கொடிதான, நம் நமது, தினத்துணி நித்தியத் துன்பத்தை களை நீக்குகின்ற, செங்கோட்டினன் - திருச்செங்கோட்டு முருகக் கடவுளது. செந்தில் - திருச்செந்திற்பதியின், அம் அழகிய, நீர் சலமானது, தீன் - இனிய, நந்தின் - சங்கினிறம் போல, அத்து - சிவப்பை, உதவ கொடுக்கின்ற, துப்பு - பவளம் போன்ற அதரத்தில், இரசதம் - வெண்மைநிறத்தை செய்யவற்றே - செய்யவல்லதோ (எ று) நீர்-எழுவாய், செய்யவற்றே-பயனிலை,ஏ-அசை (க im. یا عد( திருச்செங்கோட்டு முருகக் கடவுளது திருச்செந்திற்பதியின் தீர்த்தம் நாம் நாடோறும் இரத்தலால் உண்டாகுந் துன்பத்தை யொழிக்க வல்லதாயினும் பவளம் போலும் சிவந்த இதழைச் சங்குபோலும் வெண்மையாக்க வல்லதோ? (கு உ) (1) இப் பாடல் "சுனை நயந்துரைத்தல்" என்னும் துறை. தனது களவொழுக்கத்தை மறைக்கத் தலைவி சுனையாடி வந்தேன் என, "சுனையாடி வந்தால் நிறம் இப்படித்தான் மாறுமோ, இதழ் ஏன் வெளுத்து உளது; அப்படி மாற்றும் சுனை எது - நானும் அந்தச் சுனையில் ஆடுவேன்"என்று தோழி கூறுவது: கடைக்கண் சிவந்து இதழொன்றே வெளுப்ப..... மலர்க் குழலாய் சுனை யாதினுள் தோய்ந்தனையே - வெங்கைக் கோவை 68. மையார் குவளை சிவந்திடச் செய்ய மணிப்பவளம் மொய்யார் தரளம தாக எமக்கு முதிர்விக்குமோ H. H. H. H. H. m. m. நீ குடைந்தாடும் வியன் சுனையே சிராமலைக்கோவை -72. (2) திருச்செந்துார்த் தீர்த்தங்கள் இருபத்து நான்கின் பெருமையைச் செந்துார்த் தலபுராணம் விரித்தும் கூறும்: உதாரணமாக,ஒரு தீர்த்தத்தின் பெருமையைக் காண்க: அல்லல் யாவையும் அகற்றி, நீக்கரும் தொல்லை யூழறத் தொலைத்து, வேதநூற் கல்வி காட்டிச் செங் கமலத் தாளருட் செல்வங் காட்டுஞ்சத் தியத்தின் தீர்த்தமே. - செயந்திபுரவைபவம் 63.