பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 225 (ப-உ. சிந்துர திலதந் தீட்டிய இத் தகவு இத்தகைமைப்பாடு ஆரும் நிறைந்திருக்கின்ற, புகர் புள்ளி ப்ொருந்திய முக' முகத்தையுடைய தெய்வ - தெய்விகமான, வெள்ளைச்சிந்துர . அயிராவதத்தினிடம் வளர்ந்த வித்தக அற்புதமான, வல்லி தெய்வயானைக்கு சிங்கார இனிமையானவனே! செந்தூர செந்திற்பதிக்கு நாயகனே குன்ற்ம் - கிரவுஞ்சகிரியை, சிந்து பொடிசெய்த உர வல்லவனே வித்தக - சர்வக்ஞனே! முத்திக்கும் மோகூத்திற்கும், ஆய் - ஆராய்ந்தருள் செய், நின்ற் அடியவர்கட்கெல்லாந்தாய்போல நின்ற, செல்வ-செல்வனே துஞ்சா. கண்ணுறங்காமல் முழங்குகின்றது, சிந்து - சமுத்திரமும்; ரவி . சூரியனுடைய, தகனம்போலும் காந்தியைப் ப்ோலத் தகிக்கின்றது. இங்கு இவ்விடத்தில் (இடைவிடாமல்) இளம் - இளமை தங்கிய, திங்களும் குளிர்ந்த சந்திரனும் (எறு) நீ தோன்றா எழுவாய் ஆப் பயனிலை.ஏ-அசை (த-உ சிந்துரந் திட்டும் புகர்முகத்தையுடைய அயிரா. வதத்தினிடம் வளர்ந்த தெய்வயானை நாயகனே! முத்திக்கு வித்தகனே! கிரவுஞ்சகிரியைத் தகர்த்த செந்தில் நாயகனே நிறைந்த செல்வனே! சமுத்திரம் முழங்கியும், சந்திரன் வெப்பத்தைத் தந்தும் என்னை வருத்துவதை நீஆய்ந்தருள். (கு.உ) ஆப் என்பது இடைநிலைத் தீபமாய் - முதலில் ஆராய்ந்து என்னும் பொருளையும், பின்னர் தாய் என்னும் பொருளையும் காட்டுகின்றது. முத்திக்கு இந்த அடியான் தக்கவ்னா என்று ஆராய்ந்து அருள்செய்க செல்வ-என்றும்,முத்தியை அருளுதற்கு ஆய்நின்ற தாய்போல அருள் பாலித்துநிற்கும் - செல்வ என் அறும் பொருள் கொள்ளப்பட்டுளது. முத்திக்கும் (ஆப் நின்ற) மூல காரணனாய் நின்ற செல்வ எனவும் பொருள் காணலாம். இந்தப் பொருளில் சிந்து எழுவாய் துஞ்சா பயனிலை திங்கள் எழுவாய் தகனம்போலும் பயனிலை (2) கடலும், திங்களும் வேதனை கொடுப்பதை செய்யுள் 9-ல் பார்க்கவும். 71. மடற்றிறம் திங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிரு திங்களு மாசுண மாக்கும் பதாம்புயன் செந்திலன்னாள் திங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந் திங்களு மாசுண நன்றான் மாற்றமுந் , திட்டினன்றே. V. يسكي.


"

--عی